முத்தலாக் சொல்லிவிட்டால் முஸ்லிம் பெண்களின் கதி அவ்வளவுதானா?

(இந்தக் குறிப்புகள் முத்தலாக் குறித்து திருக்குர்ஆன் என்ன சொல்கிறது, இதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா, எப்போது இது நடைமுறைக்கு வந்தது முதலான விடயங்களைப் பேசப் போவதில்லை. முத்தலாக்கைக் கடுமையாகக் கண்டிக்கும் சீர்திருத்தவாதிகளும், பெண்ணியர்களும், ஊடகங்களும் இந்த அவசரத்தில் முத்தலாக் வழங்கப்பட்டுவிட்டால் அத்தோடு அந்த மனைவியின் அனைத்து உரிமைகளும் பறிபோய் அவள் அனைத்தும் இழந்தவளாக்கப்படுகிறாள் என்றே முன் வைக்கின்றனர். அவர்களின் புரிதலுங் கூட அப்படித்தான் இருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. இந்திய நீதிமன்றங்கள், கீழ் நீதிமன்றங்களிலிருந்து உச்சநீதிமன்றம் வரை, இருக்கிற முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படிப் பல தீர்ப்புகளில் முத்தலாக் சொல்லப்பட்ட மனைவியரின் உரிமைகளைப் பாதுகாத்துள்ளன என்கிறார் இத்துறையில் வல்லுனரான ஃப்ளேவியா ஆக்னஸ். அவருடைய கட்டுரை ஒன்றிலிருந்து சில தகவல்கள்)
1. Shamim Ara v State of UP வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு (2002): தன்னிச்சையான (arbitrary) முத்தலாக்கை சட்டபூர்வமானதாக ஏற்க இயலாது என்பது இவ்வழக்கில் தெளிவாக்கப்பட்டது. விவாகம் ரத்து செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் மனைவி ஜீவனாம்சம் வேண்டி நீதிமன்றத்தை அணுகும்போது, ரத்து செய்த கணவன் தான் முத்தலாக் சொல்லி விட்டதால் அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை எனச் சொல்வதை ஏற்க இயலாது என்றது உச்சநீதிமன்றம். தான் முத்தலாக் சொல்லிவிட்டதாக இப்படிச் சொல்லிவிடுவது ஒன்றே பொறுப்பிலிருந்து தட்டிக் கழிக்கப் போதுமானதல்ல. திருக்குர் ஆனில் உள்ள நிபந்தனைக்கு (injunction) இணங்க முத்தலாக் ‘அறிவித்து ஒலிக்கப்பட’ (pronounce) வேண்டும்’.என நீதிமன்றம் வரையறுத்தது. ‘அறிவித்து ஒலித்தல்’ என்பது ‘உரத்து அறிவித்தல்’, ‘பிரகடனப்படுத்துதல்’, ‘உறுதிடக் கூறுதல்’, ‘தெளிவாக உரைத்தல், (“to proclaim, to utter firmly, to declare, to articulate”).

முன்னதாக கீழ் நீதிமன்றங்கள் கணவரின் கூற்றை ஏற்று அவர் முத்தலாக் சொல்லிவிட்டதகச் சொன்னதை அங்கீகரித்து ஜீவனாசப் பொறுப்பிலிருந்து அவரை விடுவித்திருந்ததை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. மாறாக,
“எந்த (இஸ்லாமிய) புராதனப் புனித நூற்களும், வேதங்களும் இத்தகைய விவாகரத்து வடிவத்தை ஏற்கவில்லை. கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக ஏதேனும் ஒரு ஆவணத்தில் ஒலிக்கப்பட்டுள்ளதாலேயே, அம் மனைவி அதை அறியும் நாளிலிருந்து முறைப்படி விவாகரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும் என எந்தப் (புனித)ப் பிரதியிலிருந்தும் எங்களுக்குக் காட்டப்படவில்லை”
என உச்சநீதிமன்றம் அறிவித்தது. எனினும் இந்த முக்கிய தீர்ப்பு போதுமான அளவு மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. ஆனாலும் இந்த அடிப்படையில் பிறகு பல தீர்ப்புகளில் முத்தலாக் சொல்லப்பட்டதாகக் கணவர்கள் சொன்னதை நீதிமன்றங்கள் ஏற்கவில்லை. முத்தலாக் செல்லுபடியாகும் என்பதற்கு திருக்குர்ஆன் முன்வைக்கும் தடை ஆணை (நிபந்தனை- injunction) என்ன? தொடர்ந்து பார்ப்போம்.

2. Dagdu Pathan v Rohimbi pathaan (டக்டு பதான் எதிர் ரோஹின்பீவி பதான், 2002) வழக்கு: மும்பை உயர்நீதிமன்ற முழு அமர்வு கணவன் தன்னிச்சையாக விவாகரத்து செய்வதற்கு சட்ட ஏற்பு அளிக்க இயலாது என்றது. கீழ்க்கண்ட திருக்குர் ஆன் நிபந்தனையை அது ஆதாரமாகக் காட்டியது: “காரணமின்றி மனைவியை ரத்து செய்தல் என்பதும், கணவனின் சட்ட விரோதமான கோரிக்கைகளை ஏற்க மறுத்ததாலேயே பழிவாங்கும் நோக்கில் அல்லது துன்புறுத்தும் நோக்கில், ஷரியத்தின் விதிமுறைகளை மீறி விவாகரத்து செய்தல் என்பதும் ஹராம்.”

தன்னிச்சையான அறிவிப்பு என்பதற்கு அப்பால் கடைபிடிக்கப்பட வேண்டிய நிபந்தனைகளாக நீதிமன்றம் சொன்னவை:

1. விவாகரத்துக்கான காரணங்களைத் தெரிவித்தல் 2. இடைநிலையாளர்களை நியமித்தல் 3. இரு தரப்பிற்கும் இடையே சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுதல். விவாகரத்து செய்யப்பட்ட மனைவி நிவாரணம் வேண்டி நீதிமன்றத்தை அணுகினால் கணவன் தரப்பு தனது ரத்து நடவடிக்கை சட்டபூர்வமானதுதான் என நிறுவ மேற்கண்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டதை நிறுவ வேண்டும். “நான் முத்தலாக் சொல்லிவிட்டேன்” என ஒரு கூற்றை முன்வைப்பதை நீதிமன்றம் ஏற்க இயலாது என்றது.

3. Najmunbee v Sk Sikandar Sk Rehman (நஜ்முன் பீவி எதிர் ஏச்கே சிகந்தர் எஸ்கே ரஹ்மான், 2004) :
ஒரு முஸ்லிம் கணவன் விருப்பம்போல விவாகரத்து செய்ய இயலாது என்றது முபை உயர்நீதிமன்றம். தனது முடிவுக்கு ஆதாரமான காரணங்களை முன்வைக்க வேண்டும். நடுநிலையாளர்களைக் கொண்டு சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை முஸ்லிம் சட்டம் நிபந்தனை ஆக்குகிறது.

4. Dilshad Begaum Ahmadkhan Pthan v Ahmadkhan Hanifkhan Pathan ((டில்ஷட் பேகம் அஹமட்கான் பதான் எதிர் அஹமட்கான் ஹனீஃப்கான் பதான், 2007):
கீழ் நீதிமன்றம் மாதம் 400 ரூ ஜீவனாம்சம் அளிக்க கணவனுக்கு உத்தரவிடுகிறது. மேல்முறையீட்டில் செஷன்ஸ் நீதிமன்றம், “ஒரு மசூதியில் வைத்து, சாட்சிகள் முன்னிலையில் முத்தலாக் சொன்னேன்” எனக் கணவன் கூறியதிக் கேட்டு முறைப்படி முத்தலாக் செய்யப்பட்டதாகச் சொல்லி ஜீவனாம்சத்தை ரத்து செய்தது. வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் முன் வந்தது. மசூதியில் சாட்சிகள் முன் முத்தலாக் சொல்லப்பட்டிருந்தாலும், 1.ரத்திற்கான காரணங்களை முன்வைத்தல் 2.நடுநிலையாளர்களை நியமித்து சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தத் திருமண உறவு தொடர்வதற்கு சாத்தியமில்லை என்பது நிரூபிக்கப்படாமை முதலான பிற நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாததால் இந்த விவாகரத்தைச் சட்டபூர்வமாக ஏற்க இயலாது என உயர்நீதிமன்றம் கூறியது. கணவன் தரப்பு ஒரு சமாதான உடன்படிக்கையை முன்வைத்தது. அதன்படி கணவன் மனைவியுடன் இசைந்து வாழவோ இல்லை ஜீவனாம்சம் அளிக்கவோ தவறினால் தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கை மனைவிக்கு எழுதிவைப்பதாக ஏற்றுக் கொண்டிருந்தான். எனினும் உயர்நீதி மன்றம் இதை ஏற்க மறுத்தது. இந்த உடன்படிக்கையின்படி கணவன் நடந்து கொள்ளவில்லை என்பதால் மசூதியில் சாட்சிகள் முன் சொல்லப்பட்ட அந்த முத்தலாக்கைச் சட்டபூர்வம் அற்றது எனத் தீர்ப்பளித்தது.

5.  Riyaz Fatima v Mohd Sharif ((ரியாஸ் ஃபாதிமா எதிர் முகமது ஷரிஃப், 2007) : தான் முத்தலாக் சொல்லிவிட்டதால் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க இயலாது என்றான் கணவன். முத்தலாக் செல்லுபடியாகும் எனத் தான் பெற்றிருந்த ஃபத்வா நகல் ஒன்றையும் முன்வைத்தான். குழந்தையின் தந்தை குறித்த ஐயத்தையும் முன் வைத்தான். இதை ஏற்க மறுத்த நடுவர் நீதிமன்றம் மனைவி குழந்தை இருவருக்கும் ஜீவனாம்சம் வழங்க ஆணையிட்டது. ஆனால் செஷன்ஸ் நீதிமன்றம் கணவனின் மேல் முறையீட்டை ஏற்று கீழ் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தது. டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு வழக்கு வந்தபோது முத்தலாக்கிற்கான தெளிவான வரையறைகளை அது வகுத்தது . அவை:

1. திருக்குர்ஆன் விதித்துள்ளவாறு முறையான காரணங்களைச் சொல்ல வேண்டும் 2. சாட்சிகள் முன் அல்லது எழுத்து மூலம் கடிதம் வாயிலாக முத்தலாக் சொல்லியிருக்க வேண்டும் 3. சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை கணவன் தரப்பு நிறுவ வேண்டும். 4. ‘மெஹர்’ பணம் திருப்பித் தரப்பட்டது, ‘இத்தாத்’ காலம் (விவாகரத்து அல்லது கணவனின் மரணத்துக்குப் பின் மனைவி கடைபிடிக்க வேண்டிய காத்திருப்புக் காலம்) கடைபிடிக்கப்பட்டது ஆகியன நிறுவப்பட வேண்டும்.

இந்த வழக்கில் முத்தலாக் சொல்லியதற்கான ஆதாரம் முறையாக நிறுவப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட தினத்தில் தான் முத்தலாக் சொல்லிவிட்டதாகக் கணவனின் கூற்றை மட்டும் வைத்து அதை ஏற்க இயலாது.
நான் தொடக்கத்தில் சொன்னது போல முத்தலாக் முறை சரியா தவறா என்கிற விவாதத்திற்குள் இக்கட்டுரை செல்லவில்லை. மறாக முஸ்லிம் தனிநபர் சட்டப்படி நமது நீதிமன்றங்கள் சில பாதுகாப்புகளை பெண்களுக்கு வழங்கியுள்ளதையும் நாம் கணக்கில் கொண்டே இது குறித்த விவாதத்திற்குள் நாம் செல்ல வேண்டும். ஆனால் முஸ்லிம் வெறுப்பை ஏந்தி நிற்கும் நம் ஊடகங்கள் இவற்றைக் கணக்கில் கொள்வதே இல்லை என்பதைத்தான் ஃப்ளேவியா ஆக்னஸ் வலியுறுத்துகிறார்.

இதுபோல இன்னும் சில வழக்குகளையும் சொல்ல இயலும். சுருக்கம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். “நான் முத்தலாக் சொல்லிவிட்டேன். இதோ தலாக்நாமா. எனவே என் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது” என ஒரு முஸ்லிம் ஆண் எளிதில் சொல்லி விட்டுப் போய்விட முடியும் என சமூகத்தில் நிலவும் கருத்து தவறானது. மிகவும் படித்தவர்களும், தனக்கு நிறையத் தெரியும் என நினைப்பவர்களும் கூட இப்படிக் கருத்துக் கொண்டிருப்பதுதான் கொடுமை. எனினும் புகழ் பெற்ற ஷாபானு வழக்கில் (Mohd Ahmad Khan v Sha Bano Begum, 1985) வழங்கப்பட்ட தீர்ப்புக்குப் பின் ராஜீவ் காந்தி அரசால் இயற்றப்பட்ட (1986) முஸ்லிம் பெண்கள் சட்டத்தின் விளைவாக இப்போது முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்ச உரிமை இல்லையே என ஒருவருக்குத் தோன்றலாம். ஆனால் அச்சட்டம் இயற்றப்பட்ட பின் டானியல் லதீஃப் எதிர் இந்திய அரசு (Danial Latif v Union of India, 2001) எனும் வழக்கொன்று நீதிமன்றத்துக்கு வந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு,1986ம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினாலும், விவாகரத்து செய்யப்படும் முஸ்லிம் பெண் இச்சட்டத்தின் விளைவாகத் தன் ஜீவனாம்ச உரிமையை இழந்துவிட மாட்டாள் என்பதைத் தெளிவாக்கியது. ‘இத்தாத்’ காலம் மட்டுமின்றி உயிருடன் உள்ளவரை அவளுக்கு அந்த உரிமை உண்டு.

###

இறுதியாக இப்போது மீண்டும் இந்தப் பிரச்சினை மேலுக்கு வந்துள்ள பின்னணியைக் காண்போம்.

சென்ற அக்டோபர் 2015ல், “அரசியல் சட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ள வண்ணம் மத வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும்” என உச்ச நீதிமன்றம் கூறியது. இந்து வாரிசுரிமைச் சட்டம் பற்றிப் பேசுகையில் நீதிபதிகள் அனில் ஆர் தவே, ஆதர்ஷ் கே கோயல் ஆகியோர் இதைக் கூறினர். முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தல், ஆண்களுக்குப் பலதார மண உரிமை வழங்குதல் ஆகியவற்றின் விளைவாக முஸ்லிம் பெண்களுக்கு அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் பறிபோவதை அவர்கள் சுட்டிக் காட்டி, இது குறித்து அட்டர்னி ஜெனரலிடம் விளக்கம் கோரினர். தவிரவும் தேசிய சட்ட ஆணையத்தின் (National Legal Services Authority of India) கவனத்தையும் ஈர்த்தனர்.

இந்தப் பின்னணியில் பாலாஜி சீனிவாசன் எனும் ஒரு உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ஒரு பொதுநல வழக்கைத் (PIL) தொடர்ந்தார். கணவர் தன்மீது தொடுத்துள்ள ஒரு வழக்கை குடும்ப நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என வந்த ஷயாரா பானு என்பவரது பிரச்சினையைத் தான் மீடியா கவனம் பெறும் நோக்கில் அவர் இப்படிப் பயன்படுத்திக் கொண்டார்.. இந்த 35 வயதுப் பெண் தனது 15 ஆண்டு காலத் திருமண வாழ்வில் ஏராளமான வன்முறையை அனுபவித்தவர். வரதட்சிணை கேட்டும் கொடுமைப் படுத்தப்பட்டவர்; தன் வீட்டாரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டவர். கட்டாயக் கருச் சிதைவுகளுக்கும் ஆட்படுத்தப்பட்டு அவற்றால் உடல், மன நோய்களுக்கும் ஆளானவர். இறுதியில் அவரைத் தாய் வீட்டுக்கு அனுப்பி தபால் மூலம் தலாக்நாமா வையும் அனுப்பி வைத்தான் அவள் கணவன்.

ஷயாரா பானுவுக்கு நீதி பெற்றுத் தருவதுதான் அந்த வழக்குரைஞரின் நோக்கமாக இருந்திருந்தால், 1. இப்படித் தன்னிச்சையாக முத்தலாக் சொன்னதாக தலாக்நாமா அனுப்பியிருப்பது செல்லாது என வழக்காடி இருக்கலாம். 2. அல்லது தலாக்நாமாவை ஏற்றுக் கொண்டு, சற்று முன் கூறிய, 1986ம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் சட்டத்தின் படி ஒரு குறிப்பிட்ட ஜீவனாம்சத் தொகை அந்தப் பெண்ணுக்குத் தர வேண்டும் எனக் கோரி இருக்கலாம். 3. அதோடு 2005 ம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி அந்தக் கணவனுக்குத் தண்டனையும் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால் பாலாஜி சீனிவாசன் இது எதையும் செய்யாமல் முத்தலாக் மூலம் முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தொடுத்தார். முன்னர் இதே கோரிக்கையுடன் தொடுக்கப்பட்ட பொது நல வழக்குகளை, அவை மூன்றாம் நபர்களால் தொடுக்கப்பட்டவை என்பதைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இம்முறை இந்த வழக்கை பாலாஜி சீனிவாசன் பாதிக்கப்பட்ட ஷயரா பானுவின் பெயரிலேயே தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்ல “ஒரே நேரத்தில் ‘தலாக், தலாக், தலாக்’ என மும்முறை சொல்லும் முத்தலாக்கை (instantaneous triple talaq)” செல்லாது என அறிவிக்க வேண்டும் என்பதுதான் இப்போது வேண்டுதலாக வைக்கப்பட்டுள்ளது. முன்னர் தொடுக்கப்பட்ட வழக்குகளில் ஒட்டுமொத்தமாக முத்தலாக் மூலம் விவாகரத்து செய்வதையே செல்லாது என அறிவிக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. ஆனால் திருக்குர் ஆனில் முத்தலாக் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அப்படி ஒட்டு மொத்தமாகச் செல்லாது என அறிவிக்க இயலாது என உச்சநீதிமன்றம் அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்திருந்தது. ஆனால் திருக்குர் ஆனில் இந்த மூன்று தலாக்குகளும் இப்படி உடனடியாகவன்றி 90 நாட்களில் சொல்லப்பட வேண்டும் என உள்ளது என்பதால் உடனடியாக முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதை மட்டும் செல்லாது என அறிவிக்க வேண்டும் என இந்தப் பொதுநல வழக்கு கோருகிறது. முன்னதாக நீதிபதிகள் தவே மற்றும் கோயல் கேட்டுள்ள விளக்கங்களோடு இந்த வழக்கையும் இணைத்து அனைத்து மதத்தினருக்கும் ஒரே சிவில் சட்டம் (UCC) இயற்றுவது தொடர்பாக விசாரிக்க ஒரு சிறப்பு உச்சநீதிமன்ற அமர்வு அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

முத்தலாக் விவகாரம் இன்று மேலுக்கு வந்துள்ள பின்னணி இதுதான். முத்தலாக் விவகாரம் மேலுக்கு வந்துள்ளது மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சிறுபான்மையினரின் ஒரு முக்கிய பிரச்சினையான முஸ்லிம் தனிநபர்ச் சட்டமே இப்போது கேள்விக்குரியது ஆக்கப்பட்டுள்ளது. விவாகரத்துக்குப் பின்னும் முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்ச உரிமைகள் உண்டு, குடும்ப வன்முறைச் சட்டம் முதலான இதர சட்டங்களின் பாதுகாப்பும் முஸ்லிம் பெண்களுக்கு உண்டு என்பதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ் முதலான இந்துத்துவ அமைப்புகளும் முஸ்லிம் தனி நபர் சட்டத்தையே முற்றாக ஒழிக்க முனைகின்றன. இவர்களின் இந்த முயற்சி முஸ்லிம் பெண்களின் மீதான இரக்கத்தின் அடிப்படையில் ஆனதல்ல என்பதை விளக்க வேண்டியதில்லை.

ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதை சீனத் சவுகத் அலி முதலான முஸ்லிம் அறிஞர்களும் கூட ஏற்பதில்லை. இன்னொரு அறிஞரும், திட்ட ஆணைய உறுப்பினராக இருந்தவரும், முஸ்லிம் திருமணம் ஒன்றை காஸி யாக இருந்து நடத்தி வைத்தவருமான சைதா எஸ் ஹமீது அவர்கள் சமீபத்திய கட்டுரை ஒன்றில் (This Reform Must Begin Within, The Hindu, 27 April 2016) அச்சம் தெரிவித்திருப்பது போல உச்சநீதிமன்றம் இப்பிரச்சினையை எடுப்பது என்பது, முஸ்லிம் தனி நபர் சட்டத்தை ஒழிப்பது என்போரும், அது தொடர வேண்டும் என்போரும் முற்றிலும் எதிர் எதிராக அணி திரளுவதற்குத்தான் இட்டுச் செல்லப் போகிறது.
ஊடகங்கள் நடுவில் புகுந்து பிரச்சினையைப் பற்றி எரிய வைக்கப் போகின்றன. முத்தலாக் சட்டம் இருக்கும்போதே கூட முஸ்லிம் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்புகள் பற்றியெல்லாம் சிறிதும் பேசாமல் தீரெனத் தீவிரப் “பெண்ணிய” நிலை எடுத்து அவை எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றப் போகின்றன.

சமீபத்தில் ஊடகம் ஒன்று ஷயாரா பானுவிடம், “முன்னைக் காட்டிலும் இப்போது மதப் பிரச்சினையில் சகிப்புத் தன்மை குறைந்துள்ளதா?” எனக் கேட்க அவரும், “அப்படி ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கவில்லை. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் வகுப்பு வெறுப்பு ஒன்றும் இல்லை” எனக் கூறியுள்ளதாகச் செய்தி ஒன்று வந்தது. ‘பாரத் மாதா கி ஜே’ பிரச்சினை குறித்து கேட்டபோது, “எல்லா முஸ்லிம்களும் பாரத் மாதா கி ஜே”சொல்ல வேண்டும். அதில் எந்தத் தப்பும் இல்லை” எனக் கூறியதாகவும் செய்தி வந்தது.. இப்படியான கருத்துக்களைச் சொல்ல அவருக்கு உரிமை இல்லை என்பதல்ல. ஆனால் இந்த நேரத்தில் இந்தக் கேள்விகளை அவரிடம் முன்வைத்துப் பரபரப்பை ஏற்படுத்த முனையும் ஊடகங்களின் நோக்கத்தை நாம் கவனிக்க வேண்டும்.

முஸ்லிம் தனிநபர்ச் சட்டத்தில் தலையியிட உச்சநீதிமன்ற அமர்வுக்கு அதிகாரமில்லை என முன்வைத்து அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் (AIMPLB) வழக்கில் தலையிடப் போவது உறுதி. திருக்குர் ஆனின் அடிப்படையிலான சட்டத்தை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை என அது கூறலாம். இதெல்லாம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கவே வழி வகுக்கும். முன்னதாக. 1986ல் நாடாளுமன்றம் முஸ்லிம் பெண்கள் சட்டத்தை இயற்றியபோது அதை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இப்போது நாடாளுமன்றத்துக்கு அந்த உரிமை இல்லை எனக் கோருவதில் அர்த்தமும் இல்லை. இந்நிலையில், “முஸ்லிம் சமூகத்திற்குள் ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்வதை ஏற்கக் கூடாது என விவாதங்கள் நடக்கின்றன. கருத்து மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஜனநாயக அடிப்படையில் ஏற்படும் இந்த மனமாற்றத்தை நீதிமன்றத் தல்கியீட்டின் மூலம் சிக்கலாக்க வேண்டாம்” என்கிற ரீதியில் தனிநபர் சட்ட வாரியம் நீதிமன்றத்தை அணுகுவதே சரியாக இருக்க முடியும்.

(சட்ட வல்லுனர் ஃப்ளேவியா ஆக்னஸ் அவர்களின், “Muslim Women’s Rights and Media Coverage, EPW, May 28, 2016” எனும் கட்டுரையிலிருந்து வழக்கு விவரங்கல் எடுக்கப்பட்டுள்ளன.)

இஸ்லாமிய உரையாடல்கள்

இஸ்லாமிய சமூகம் ஒருபடித்தானது (homogeneous), ஒரே மாதிரி சிந்திக்கக் கூடியது. ஒரே மாதிரியான அரசியல் முடிவை எடுப்பது. பழமைவாதம் பேணுவது, எந்த விதமான மாற்றுச் சிந்தனைகளுக்கும் இடங் கொடாதது என்பதுதான், இன்று ஊடகங்கள் பொதுப் புத்தியில் கட்டமைக்கும் பிம்பம்.

அவ்வப்போது எங்கேனும் வழங்கப்படும் ஃபத்வாக்கள், ஏதேனும் ஜமாஅத்துகள் மேற்கொள்ளும் சமூக விலக்கு முடிவுகள் ஆகியவற்றை எதிர்க்க முனையும் குரல்களில் இக்கருத்துக்கள் ஒலிப்பதைக் காணலாம். இத்தகைய பத்வாக்கள், சமூக விலக்கு முடிவுகள் ஆகியவற்றை முன்வைத்து இஸ்லாமிய வெறுப்பைக் கட்டமைக்கும் மதவாத சக்திகளை விட்டுவிடுவோம். உண்மையான ஜனநாயக உணர்வுடனும், நியாயாவேசத்தின் அடிப்படையிலும் எதிர்ப்பவர்களிலும்கூட மேற்படி கருத்துக்கள் ஒலிப்பதைக் காண இயலும்.

உலக அளவில் ஓர் இஸ்லாமிய வெறுப்பு அரசியல் வெகு வேகமாகக் கட்டமைக்கப்பட்டு வரும் சூழலில் முஸ்லிம் மக்களின் அசைவியக்கங்களை ஓரளவு கவனித்து வருபவன் என்கிற வகையில் இக்கருத்துக்கள் அபத்தமானவை என்றுதான் சொல்ல இயலும். இரண்டாண்டுகளுக்கு முன்பு இங்கே பெருமளவில் விவாதிக்கப்பட்ட ‘இம்ரானா பிரச்சினையில் தேவ்பந்த் மதரஸா அளித்த பத்வாவுக்கு எதிராகத் தமிழக முஸ்லிம்கள் மத்தியிலிருந்து மட்டும் ஒலித்த எதிர்ப்புக் குரல்கள் சுமார் 20 க்கும் மேலிருந்ததை எனது கட்டுரை ஒன்றில் பட்டியலிட்டுள்ளேன். கிட்டத்தட்ட தமிழக முஸ்லிம் அமைப் புகள் அனைத்தும் புகழ்பெற்ற தேவ்பந்த் மதரஸா அளித்த அந்த ஃபத்வாவை ஏற்கவில்லை. கண்டித்தன. ஆனால், இந்த கண்டனக் குரல்களையும் மாற்றுக் கருத்துக்களையும் ஒதுக்கிய நமது ஊடகங்கள் ஏதோ அந்த ஃபத்வாவின் கருத்துதான் இந்திய அளவில், தமிழகம் உள்ளிட்ட எல்லா முஸ்லிம்களின் எண்ணமும் என்பதாகச் சொல்லி ‘அனைத்து முஸ்லிம்களும் அடிப்படைவாதிகள் என்பதான ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயன்றன.

பிரச்சினைக்குரிய ஃபத்வாக்கள், ஜமாஅத் முடிவுகள் ஆகியன பற்றி நடுநிலையாளர்கள் கருத்துச் சொல்லும்போது இந்தப் பிம்பக் கட்டமைப்பை முற்றிலுமாக ஒதுக்கி, குறிப்பிட்ட பிரச்சினையின் அடிப்படையில் விமர்சிக்க முனைவதே சரியாக இருக்கும். அதேபோல் மாறியுள்ள இன்றைய உலகச் சூழலில் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் மத்தியில் நடைபெறும் விவாதங்கள், மேலெழுந்துவரும் கருத்துக்கள், ஆகியன குறித்து ஒரு கவனம் முஸ்லிம்கள் மத்தியிலும் இருப்பது அவசியம். இதன் பொருள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ, இல்லை எதிர்க்க வேண்டும் என்பதோ அல்ல. மாறாக, இவை குறித்த பிரக்ஞை அவசியம். இந்த வகையில் என் கண்ணில் பட்ட சில சமீபகால விவாதங்கள், கருத்து முன்வைப்புகள் ஆகியவற்றை முன்னுரையாகச் சொல்லி, பிரிட்டிஷ் ஆட்சி, அச்சு ஊடக அறிமுகம் ஆகியவற்றினூடாக இங்கே முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட நவீனத்துவ மாற்றங்களின்போது நடைபெற்ற சில விவாதங்கள், தேவ்பந்த் அளித்த சில தொடக்க கால ஃபத்வாக்களின் தொனி ஆகியவற்றை தொகுப்பது இங்கு என் நோக்கம். இவற்றில் எனது கருத்து என்ன என்பது பற்றி இங்கு நான் எதுவும் சொல்லவில்லை. பல்வேறு பார்வைகளையும் கூடிய வரை அப்படியே தொகுத்துள்ளேன். எனினும் இஸ்லாம் குறித்தான மதிப்பீடுகளையும் விவாதங்களையும் ஆராயப் புகுமுன் ஒருசில அம்சங்களை நாம் உற்றுநோக்கல் தகும். சில :

1. விமர்சனங்கள் இஸ்லாத்துக்குள் நின்று செய்யப் படுகின்றவா? வெளியிலிருந்தும், வெளியேறி நின்றும் வருகின்றனவா?

2. யாருடைய கவனத்தை நோக்கி இவ்விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன? முஸ்லிம்களின் கவனத்தை ஈர்ப்பது நோக்கமா? இல்லை, இஸ்லாமிய பயங்கரவாதம், அடிப்படைவாதம் ஆகியவை பற்றிப் பேசிக் கொண்டிப்பவர்களுக்குத் தீனிபோடவா? (எத்தகைய ஊடகங்கள் வழியாக இவ்விமர்சனங்கள் கருத்துக்கள் வைக்கப்படுகின்றன?)

3. உண்மையான இஸ்லாமிய வழமைகளுக்குப் பொருந்தாத ‘தவறான நடைமுறைகளைக் கண்டிப்பவையா, இல்லை இன்றைக்குச் சற்றும் பொருந்தாத ‘பழைய, காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளை மாற்றத் துடிப்பவையா? வேறு வார்த்தைகளில் சொல்வதானால் விவாதம் புரிவோர் கூறும் சீர்திருத்தம் ‘பழைய உன்னத’ வழமைகளுக்குத் திரும்புவதா இல்லை, புதிய சூழல்களுக்குத் தக்க பழமையில் மாற்றம் செய்வதா?

விவாதங்களின் மீது பிரதியியல் ஆய்வு செய்வோர்க்கு இக்கேள்விகள் உதவக்கூடும். கெய்ரோவிலிருந்து கராச்சிவரை, டெஹ்ரானிலி ருந்து மொகாடிஷு வரை விரிந்து பரவியுள்ள ஒரு மதம் இஸ்லாம். இது தவிர, மேற்கு நாடுகளிலும் இன்று திட்டுத் திட்டாக முஸ்லிம் சமூகங்கள் உள்ளன. பல்வேறு மொழிகள், இனங்கள், சட்ட வடிவங்கள், வழமைகள் நிறைந்துள்ள ஒரு சமூகம் இது. வணங்குவது ஒரே இறைவனை, ஏற்றுக் கொண்டுள்ளவை ஒரே விதமான நம்பிக்கைகள், தொழுவது ஒரே கிப்லாவை நோக்கி என்பவற்றின் அடிப்படையில் மட்டுமே இஸ்லாமியச் சமூகங்களுக்குள் உள்ள பன்மைத் தன்மையை நாம் மறந்துவிடக் கூடாது. ஹஸன் அல் பன்னா, மவ்லானா மவ்தூதி, அலி ஷரியத்தீ போன்றோர் அமைத்துத் தந்த அரசியலடிப்படையிலும், இன்று பலஸ்தீனியர், ஈராக்கியர் மற்றும் ஓரளவிற்கு ஈரானியர் ஆகியோர் படும் துன்பங்கள் ஏற்படுத்திய எதிர்வினைகளாலும், உலகெங்கிலும் இன்று கட்டமைக்கப்படும் ‘பயங்கரவாதப் பிம்பம் குறித்த நியாயமான கரிசனத்தின் விளைவாகவும் முஸ்லிம் மனங்களில் மேற்கு நாடுகளின் மேலாதிக்கம் குறித்த எதிர்ப்புணர்வு உருவாகி இருப்பது ஒரு பக்கம் எனில், இன்னொரு பக்கம் பல மாதிரியான மறு சிந்தனைகளும் மாற்றுக் குரல்களும் இஸ்லாத்துக்குள் உருவாகியுள்ளன. இஸ்லாத்திற்குள் இருந்து கொண்டு விமர்சனம் செய்தல் என்கிற நிலையைத் தாண்டி, தங்களை வெளியே நிறுத்திக்கொண்டு விமர்சனம் செய்பவர்களில் ஒரு சிலரை முதலில் பார்ப்போம்.

(i) டாக்டர் வபா சுல்தான் : அராபிய – அமெரிக்க உளவியலாளரான இவர், சில காலத்திற்கு முன் அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ”முஸ்லிம்கள் மட்டுமே தங்கள் நம்பிக்கைகளைக் காப்பாற்றுவதற்காக மாதா கோயில்களை எரிக்கிறார்கள். மக்களைக் கொல்கிறார்கள். தூதரகங்களை அழிக்கிறார்கள்” என்றார். பிரச்சினைகளின் எல்லாப் பக்கங்களையும் கணக்கில் கொள்ளாத, மிகவும் ஆபத்தான, எளிமைப்படுத்தப்பட்ட ஒரு கூற்று இது என்பது வெளிப் படை. முஸ்லிம் உலகில் நிலவும் ‘பழமைவாதம்’,’காட்டு மிராண்டித்தனமான தண்டனைகள் குறித்த அவரது கண்டனங்களை மேலை ஊடங்கள் முக்கியத்துவம் அளித்துப் பரப்பின. ஒரு பக்கம் அவருக்குப் புகழ், இன்னொரு பக்கம் ஃபத்வாக்கள். அறிவுத் தேக்கத்திலிருந்தும், பழமைவாத ஆணாதிக்கத்திலிருந்தும் முஸ்லிம் சமூகத்தை விடுவிப்பதும், மாற்றங்களுக்கு எதிரான மூட மனநிலையிலிருந்து உசுப்பிவிடுவதும் தன் நோக்கம் என்கிறார் வபா.

(ii) அயான் ஹிர்ஸி அலி : சோமாலியாவில் பிறந்த டட்சு நாட்டு பாராளுமன்ற உறுப்பினர். நெதர்லான்ட் நாட்டில் முஸ்லிம் பெண்கள் குறித்து இவரது குழுவால் எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்று பெரும் சர்ச்சைக் குள்ளானது. படத் தயாரிப்பாளர் தியோ வான்கோ கொல்லப்பட்டார். முஸ்லிம் சமூகம் மிகவும் பிற் போக்குத்தனமானது, நாகரீக நிலையை எட்டாதது, மத்திய காலப் பழமை நிலையுடன் தேங்கிப் போனது, பெண்களைத் தாழ்த்தி வைத்திருப்பது முதலான கடும் விமர்சனங்களை வைக்கிறார் அயான்.

மேற்குறித்த இருவரும் தங்களை முஸ்லிம் சமூகத்திற்கு வெளியே நிறுத்திக்கொள்பவர்கள். ”மூட நம்பிக்கைகளை ஏற்காத ஒரு மதச்சார்பற்ற மனித உயிர்” எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் வபா, இஸ்ரேல் நாட்டு தேசிய வானொலியில் தன் கருத்துக்களைப் பேசியது சர்ச்சைக்குள்ளானது. ”நான் என்னை ஒரு முஸ்லிமாகவே கருதிக் கொள்ளவில்லை” என்றும் ஒரு சந்தர்ப்பத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் எதிர்ப்பாளர்களை நோக்கி அவர்களது ஊடகத்தில் இத்தகைய முஸ்லிம் எதிர்ப்புக் கருத்துக்களை அவர் முன் வைப்பது கவனிக்கத்தக்கது.

இவர்களைப் போலத் தன்னை முஸ்லிம் அல்ல எனச் சொல்லிக் கொள்ளாதவராயினும், மதம் நிச்சயமாக ஓர் அடையாளத்தை அளிக்கும் கருவிதான் என ஏற்றுக்கொள்பவராயினும் இன்றைய முஸ்லிம் சமூக நடைமுறைகள் பலவற்றையும் கடும் விமர்சனத்திற்குள்ளாக்கும் ஒரு பத்திரிகையாளர் இர்ஷாத் மஞ்சி, தமது மத நம்பிக்கையிலுள்ள பல அம்சங்களின் இன்றைய பொருத்தப்பாட்டைப் பற்றிச் சிந்திக்க இயலாத சமூகமாக முஸ்லிம்கள் உள்ளனர் எனச் சொல்லும் மஞ்சி, மதக் காவலர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்பவர்கள் குறித்த அச்சமும், இறைவனின் கட்டளைகளால் ஆன புனித குர்ஆனே இறுதியானது என்கிற நம்பிக்கையும்தான் இதற்குக் காரணம் என்கிறார். திருக்குர்ஆனின் ஆயத்துகளுக்கு ஒரு சாதாரண பிரதி வாசகம் போல் நேரடியாகப் பொருள் கொள்ளுதலைக் கண்டிக் கும் இவர், இன்றைய சமூகத்தின் சமகாலத் தேவைகளுக்கேற்ப திருக்குர்ஆனை வாசிக்க வேண்டும் என்கிறார்.

இத்தகைய வாசிப்பிற்கு திருக்குர்ஆன் எதிரானதல்ல.

தொடர்ந்து மறுவாசிப்பையும், மறு விளக்கங்களையும் கோருவதாகவே அதன் தன்மை உள்ளது. சுதந்திரமான பொருள் கோடலுக்கு வழிவகுக்கும் ”இஜ்திஹாத் இஸ்லாமியப் பாரம்பரியம், ஒவ்வெரு முஸ்லிமும் தனது மத நடவடிக்கைகளைக் காலத்திற்கேற்றவாறு அமைத்துக் கொள்ள வழிவகுக்கிறது” என்றெல்லாம் சொல்லும் இர்ஷாத் மஞ்சி, இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகத்திற்குப் பிந்தைய சில நூற்றாண்டுகளை இந்நிலைக்கு எடுத்துக் காட்டாய் முன்வைக்கிறார். இஸ்லாத்தின் பொற்காலம் எனக் குறிப்பிடப்படும் இந்நிலை இஸ்லாம் பெரிதும் வளர்ச்சியடைவதற்குக் காரணமாக இருந்த ஒன்று.

அரசியலில் மட்டுமின்றி அறிவுத்துறையிலும் பல அம்சங்களில் தலைமை ஏற்பவர்களாக அன்று முஸ்லிம்கள் இருந்தனர். ஆனால், ஐரோப்பாவோ அன்று இருண்ட காலத்தில் அமிழ்ந்திருந்தது. மேற்கத்தியத் தத்துவவியலைக் காப்பாற்றிய பெரும் பணியையும் அன்று இஸ்லாமே நிறைவேற்றியது.

இஸ்லாமிய அரசு விரிவாக்கம் தடுக்கப்பட்டு, ‘நம்பிக்கையற்றவர்களால்’ முஸ்லிம் பேரரசர்கள் தோற்கடிக்கப்பட்டு, பின்னுக்குத் தள்ளப்பட்டபோது அது அறிவுத்துறையில் தனது தன்னம்பிக்கையை இழக்கத் தொடங்கியது. இதன் பின் அரபியர்களுக்கு எஞ்சியது அதன் தொடக்க காலச் சிறப்புத்தான். இஸ்லாம் தோன்றிய காலத்துப் பெருமை தான் அது. இது ஒரு வகையான ‘உருவாக்க கால வாதத்திற்கு’ (foundationalism- கவனிக்க, fundamentalism என மஞ்சி கூறவில்லை) இட்டுச் சென்றது. எனவே திருக்குர்ஆன், ஹதீஸ் முதலானவற்றிற்கு உருவாக்க காலத்தில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் நிலை நிறுத்தப்பட்டன. இது கூடுதலான அறிவு வளர்ச்சிக்குத் தடையானது. அரபியத் தீபகற்பத்தில் உருவான இத்தகைய ‘உருவாக்க கால வாதம் படிப்படியாக முஸ்லிம் உலகெங்கும் பரவியது. ஒரே இறைவனை ஏற்பது என்பது உடை, மொழி, தொழுகைத் தலக் கட்டிடக் கலை ஆகிய அனைத்திலும் அரபுக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதல்ல என்பன இர்ஷாத் மஞ்சியின் வாதம்.

இஸ்லாமியப் பாரம்பரியத்திற்குள் தன்னை உறுதியாக நிறுத்திக்கொண்டு ஆனால், பெரும் சீர்திருத்தங்களைக் கோருபவர்களில் இன்னொருவர் தாரிக் ரமதான். ‘மேலை நாட்டு முஸ்லிம்களும், இஸ்லாத்தின் எதிர்காலமும்’ என்கிற அவரது நூல் பெரிய சர்ச்சைக்குள்ளானது. கல்லால் அடித்துக் கொல்லுதல் முதலான ‘ஹுதூத்’ தண்டனை முறைகளும் மரண தண்டனை யும் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும் எனச் சர்வதேச முஸ்லிம் சமூகத்திற்கு அழைப்பு விடுக்கும் ரமதான், தான் இத்தண்டனை முறைகளை எதிர்ப்பது அவற்றின் காட்டுமிராண்டித்தனத்திற்காக அல்ல, மாறாக எத்தகைய சந்தர்ப்பங்களில் இத்தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற அம்சத்தில் இஸ்லாமிய மதவியலில் கருத்தொருமிப்பு கிடையாது என்கிறார். இஸ்லாத்தின் இரண்டாம் கலீபாவாகிய உமர், பஞ்ச காலங்களில் திருடர்களின் கரங்கள் வெட்டப்படும் தண்டனையை நிறுத்தி வைத்திருந்ததை எடுத்துக் காட்டுகிறார். இந்தத் தண்டனையை நிறை வேற்றுவதற்கான நீதியான சூழல் அப்போது இருக்கவில்லை என்பதே உமரின் கருத்து. எனவே நீதியான இஸ்லாம் வரையறுக்கிற சமநிலையான சமூகம் எல்லா அம்சங்களிலும் நிலவுகிற ஒரு சூழலில் மட்டுமே இத்தண்டனை முறைகள் பொருந்தும் என்றாகிறது. பெரும்பான்மையான உலமாக்கள் ஹுதூத் தண்டனை முறைகள் இஸ்லாத் திற்குட்பட்டவைதான் என்பதை உறுதியாக ஏற்றுக் கொண்டபோதிலும், அன்றைய சூழலை மறு உருவாக்கம் செய்வது சாத்தியமில்லை என்றே கருதுகின்றனர் என்கிறார் ரமதான். எனவே அடிப்படை நம்பிக்கைகளின் எல்லைகளுக்குள்ளேயே பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது ரமதானின் கோரிக்கை. ஆனால், பாரம்பரியமாகக் கடைப் பிடிக்கப்பட்டு வரும் மத நடைமுறைகளில் சிதைவை ஏற்படுத்தாமல் புது விளக்கங்கள் அளிப்பது சாத்திய மில்லை என்பது இன்னொரு சாராரின் கருத்து. கெய்ரோவிலுள்ள புகழ்பெற்ற ‘அல் அஸ்ஹர்’ பல்கலைக் கழகத்தின் உலமாக்கள், ‘ஹுதூத் தண்டனைகளைத் தடை செய்யக் கோரும் ரமதானின் அழைப்பு இஸ்லா மிய அடிப்படை நம்பிக்கைகளுக்கு எதிரானது. உமர் அவற்றைக் கட்டுப்படுத்தியது போர்க் காலங்களில் மட்டுமே. இன்றைய சூழலுக்கு அது பொருந்தாது’ எனக் கூறினர்.

”மாபெரும் திருட்டு: இஸ்லாத்தைத் தீவிரவாதிகளிட மிருந்து காத்தல்” என்கிற இன்னொரு சர்ச்கைக்குரிய நூலை எழுதியுள்ள காலித் அபூ அல் பதல், ஒசாமா பின் லேடனின் உரைகளின் தொகுப்பு ஒன்றை விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்கிறார். சிலுவைப் போர் காலத்தியக் கிறிஸ்தவ தீவிரவாதத்துடன் பின் லேடனின் கருத்துக்களை ஒப்பிடுவதன் மூலம் தீவிரவாதம் எல்லா மதங்களிலும்தான் உள்ளது என்பதை நிறுவும் காலித், இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தமக்கு ஆதரவாகத் திருப்ப முயலும் தீவிரவாதத்திலிருந்து முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் விலகி நிற்க வேண்டும் என்கிறார்.

லண்டனிலிருந்து முஸ்லிம் பிரச்சினைகளை ‘இந்து’ நாளிதழில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் ஹஸன் சுரூர் (பார்க்க இந்து, ஆக 28, 2004) சுட்டிக் காட்டும் சில எதிர்ப்புக் குரல்களை இனி காணலாம். இஸ்லாத்திற் குள்ளிலிருந்து எழுகிற மிதமான எதிர்ப்புக் குரல்கள் இவை. “ஒரு ஐயவாத முஸ்லிமின் பயணங்கள்” என்னும் நூலை எழுதியுள்ள ஜியாவுத்தீன் சர்தார் ஒரு நம்பிக்கை யாளர். இஸ்லாத்தை ஆழமாகப் பயின்ற இவர் ‘நிறுவன மயப்பட்ட இஸ்லாம் தன்னிடம் பதிலில்லை எனப் பாவனை செய்யும் கேள்விகளுக்குப் பதில் தேட’ முனைவதாகச் சொல்கிறார். முஸ்லிம் குழுக்கள் பலவற்றுடன் இணைந்து பணியாற்றியுள்ள சர்தார் ‘வலதுசாரி மதப் பிரச்சாரகர்களிடமிருந்தும், அறியாமையையும் குருட்டு நம்பிக்கையையும் பரப்பி வரும் தலைவர்களிடமிருந்தும்’ இஸ்லாத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார். எல்லாக் கேள்விகளுக்கும் இஸ்லாத்திற்குள் பதிலிருக்கிறது என்றும் விவாதத்தை முன்வைத்து சீர்திருத்தம் கோருவோர்களை இஸ்லாமுக்கு எதிரானவர்கள், ‘காபிர்கள்’ என்றும் கருதுபவர்களுக்கு சர்தாரின் ஆய்வுகள் நிச்சயம் உவப்பளிக்காது என்கிறார் ஹஸன் சுரூர். போதாமையையும் பழமையிலிருந்து அவசியமான சில சந்தர்ப்பங்களில் விலகுவதையும் மறுப்பவர்கள் இறுதியில் மனிதநேயத்தையே மறுப்பவர்களாகின்றனர் என்பது சர்தாரின் கருத்து.

சர்தாரின் பேட்டி ஒன்றும் சில ஆண்டுகள் முன் ‘இந்து’ நாளிதழில் (மார்ச் 14, 2004) வெளிவந்தது. ”சம கால உலகப் பார்வை ஒன்றை உருவாக்கும் வகையில் இஸ்லாத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, மறு உருவாக்கம் செய்யவேண்டியதன் அவசியத்தை’ அதில் அவர் வற்புறுத்தியிருந்தார். ‘அடிப்படை இஸ்லாமியக் கருத்தாக்கங்களுக்கு எந்தப் பங்கமுமில்லாமலேயே இதைச் செய்ய முடியும். இத்தகைய மறு பார்வைக்கான காலம் ஏற்கனவே ரொம்பக் கடந்துவிட்டது. ஆனால், அதற்கான தேவையை முஸ்லிம்கள் பெரிய அளவில் இன்று உணரத் தொடங்கியுள்ளனர். உலகெங்கும் இன்று பரவியுள்ள இஸ்லாம் அவ்வச் சூழலுக்குரிய வகையில் தன்னைத் தகவமைத்துகொள்வதும் அவசியம். தேசியச் சூழலுக் குரிய வகையில் தன்னைத் தகவமைத்துக் கெள்ளும் இஸ்லாத்திற்கே இனி எதிர்காலம் என்பன சர்தாரின் கருத்துக்கள். தேசியச் சூழலுக்கு ரொம்பவும் தன்னைத் தகவமைத்துக் கொள்ளாததால்தான் கிறிஸ்வத்தைப் போலன்றி, இஸ்லாம் இந்தியச் சாதீயத்திலிருந்து பெருமளவு தன்னைக் காப்பாற்றிக் கொண்டுள்ளது என்பதையும் நாம் மறக்க இயலாது. ஏனோ பேட்டியாளர் இந்தக் கேள்வியைச் சர்தாரிடம் கேட்கவில்லை.

இஸ்லாத்திற்குள் நின்றுகொண்டு சீர்திருத்தங்களைக் கோரும் இன்னொரு மிதவாதக் குரல் மரினா மகாதிருடையது. இஸ்லாமிய சட்டங்களை நவீனப்படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ள முன்னாள் மலேசியப் பிரதமர் மஹாதிர் முஹம்மதுவின் புதல்வி இவர். ”கிட்டத்தட்டத் தீண்டாமை எனச் சொல்லத்தக்க அளவிற்கு எமது நாட்டு முஸ்லிம் பெண்கள் கீழ்நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். முஸ்லிம் ஆண்களுக்கு இன்றும் பலதார மணம் நடைமுறையிலுள்ளது. பிற மதங்களில் பிள்ளைகளின் இயற்கைக் காப்பாளர்களாக பெற்றோர்கள் இருவருமே இருக்க முடியும் என்றபோதிலும், முஸ்லிம் மதத்தில்தான் தந்தை மட்டுமே காப்பாளராக முடியும் என்கிற நிலையுள்ளது. முற்போக்குச் சட்டங்களின் விளைவாக முஸ்லிமல்லாத மலேசியப் பெண்களுக்குக் கிடைத்த பல உரிமைகள் முஸ்லிம் பெண்களுக்குக் கிடைக்க வில்லை என்கிறார் மரினா. ”முஸ்லிம் நாடுகளிலேயே ரொம்பவும் முற்போக்கானது மலேசியாதான். இருந்தும் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பழங்குடிச் சமூகத்தில் வேர் கொண்டுள்ள சட்டங்களின் துணையுடன் இந்த பன்முகக் கலாச்சாரமுடைய நவீன அரசின் பல பிரச்சினைகளை திருப்திகரமாகத் தீர்க்க இயலவில்லை என்கிறார்.

மத நடைமுறைகளையும், மதச் சட்டங்களையும் வித்தியாசப்படுத்தி அணுக வேண்டும் என்பது ஹஸன் சுரூரின் கருத்து. (‘இந்து’, மே 14, 2006). மத நடைமுறைகள், அவை எவ்வளவு பழமைவாதத் தன்மையானவையாக இருந்தபோதிலும் அவை தனிநபர் சம்பந்தப்பட்டவை. அவரவர் தேர்வைப்பொறுத்தது அது. ஆனால், திருமணம், விவாகரத்து, பெண்ணுரிமைகள், சொத்துப் பிரச்சினைகள், குற்ற நடவடிக்கைகள், தொடர்பான மதச் சட்டங்களோ சமுகத்தில் உள்ள எல்லோரையும் பாதிக்கக் கூடியவை. சட்டம் இறுகி உறைந்து போகக் கூடிய ஒன்றல்ல. அது இயங்கு நிலையிலுள்ளது. ஒட்டு மொத்த சமூகத்திலும் உருவாகி வரும் மாற்றங்களுக்குத் தக அவை நவீனப்படுத்தப்படுதல் அவசியம். எனவே பல்வேறு மதப் பிரிவினருக்கும் பொருந்தக் கூடிய மதம்சாராச் சட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்கிறார். லண்டனில் இருந்து கொண்டு ஹஸன் சுரூர் இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் ‘டெய்லி டெலிகிராப்’ என்கிற வலதுசாரி இதழ் ஒன்று மேற்கொண்ட சர்வே ஒன்றின்படி, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பிரிட்டிஷ் பகுதிகளில் ஷரியத் சட்டம் அமுல் செய்யப்பட வேண்டும் என 40 சத பிரிட்டிஷ் முஸ்லிம்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) சென்ற 2006 ஜனவரியில், ”பெண்களும், புத்தாயிர வளர்ச்சிக் குறிக்கோள்களும்” என்றொரு முன்று நாள் மாநாட்டை ரியாத்தில் கூட்டியிருந்தது. சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் மகளும், இளவரசியுமான அடிலா இவ்வமைப்பைத் தொடங்கி வைத்தார். சவூதியின் கல்வி, ஊடகம், சமூக நலம், பொருளாதாரம், மருத்துவம் எனப் பல துறைகளிலும் உயர் பதவிகளிலுள்ள பல முஸ்லிம் பெண்கள் இதில் முன்னணியில் இருந்தனர். ”பெண்களும், தலைமை ஏற்றலும்” என்கிற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்திய பேராசிரியர் ஹமன் அல் அஹமதி 50 சதத்திற்கும் மேலாகப் பெண்கள் உள்ள ஒரு சமூகத்தில் அவர்களையும் பிரதிநிதித்துவப் படுத்தாமல் எடுக்கும் முடிவுகளின் பொருந்தாமையையும், எதிர்விளைவுகளையும் தொட்டுக் காட்டினார். எனினும் இம்மாநாட்டில் மேல் தட்டைச் சேர்ந்த சில தாராளவாதச் சிந்தனையுள்ள முஸ்லிம் பெண்களே பங்கு பெற்றனர் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. ”பெண்களுக்கு எதிரான எல்லா வகை வேறுபடுத்தல்களுக்கும் எதிரான உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள 100 நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்று. இது இஸ்லாமிய மதிப்பீடுகளைக் குலைக்கும் ஒரு முயற்சி என்கிற விமர்சனமும் உண்டு.” (டெக்கான் க்ரானிக்கல், 27, ஜனவரி 2006).

மேற்குறித்த இதழில் லுப்னா ஹுசைன் என்கிற சவூதிப் பெண் எழுத்தாளரின் பேட்டியும் வந்திருந்தது. சவூதியிலிருந்து இந்தியாவுக்கு வந்திருந்த பெண்கள் குழுவிலிருந்த அவர், ”திரை மூடிய முகம், அடிமைத் தனம், வீட்டுக்குள் முடங்குதல் என்பதாக ஒரு அச்சுப் பதிவுப் பிம்பத்தைச் சவூதி முஸ்லிம் பெண்கள் குறித்து உருவாக்கிக் கொள்ளாதீர்கள்” என்றார். பல துறைகளிலும் பெண்கள் உயர் நிலையிலுள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர், சவூதியின் முக்கிய ஆங்கில தினசரியின் உதவி ஆசிரியையே ஒரு பெண்தான் என்றார். ”நாங்கள் நவீன மயப்பட விரும்புகிறோம். மேலை மயப்படவல்ல” என்றும் கூறினார்.

இன்னும் சில விவாதங்களை இங்கு எழுதுவதற்கும் தயக்கமாக உள்ளது. டொரோன்டோவை மையமாக வைத்து இயங்குகிற கனடிய முஸ்லிம் குழு ஒன்று (முஸ்லிம் கனடா காங்கிரஸ்), ஒருபால் புணர்ச்சியாளர்கள் தமக்குள் திருமணம் செய்துகொள்ளலாம் என அந்நாட்டில் கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை வர வேற்றுள்ளது (கம்யூனிலிசம் காம்பட், மே 2005). ஸ்பெயினில் உள்ள ‘இஸ்லாமிய ஆணையத்தின் இயக்குநர் நாயகம் மன்சூர் எங்குபேரோ பெடேட் என்பவர் ஒசாமா மீதும் அல்குவைதா மீதும் ஃபத்வா விதித்துள்ளார் (அதே இதழ்). லண்டன் முஸ்லிம் கல்லூரிகள் மற்றும் இமாம்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அமைப்பின் தலைவருமான ஸாகி பதாவி ”எதற்குப் பிரச்சினை, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப்பைத் தவிர்க்கலாமே” என்று கூறியதும் அதற்கு முஸ்லிம் சமூகத்திற்குள்ளிருந்து எதிர்ப்புகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

எதற்கு இவையெல்லாம் சொல்கிறேன் எனில் இப்படிப் பல தரப்பட்ட கருத்துக்களும், முஸ்லிம் சமூகத்திற்குள் மோதிக்கொண்டுதான் உள்ளன. மாற்றுக் கருத்துக்கள் சொன்ன எல்லோருக்கும் முஸ்லிம் தலைமைகள் ஃபத்வாக்கள் விதித்துவிடவில்லை. விதிக்கப்பட்ட ஃபத்வாக்களைத் தனித்தனியே எடுத்துக் கொண்டுதான் நாம் நியாய, அநியாயங்களை ஆராய வேண்டும். சல்மான் ருஷ்டிக்கு வழங்கப்பட்ட ஃபத்வா போன்றவை நீண்ட வரலாற்று, அரசியல் பின்னணி கொண்டவை. எனினும் கூட ருஷ்டிக்கு வழங்கப்பட்ட ஃபத்வாவை உலகெங்கிலுமுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் எதிர்த்தது நினைவிற்குரியது. சென்ற நூற்றாண்டின் தொடக்கம் இங்கே மிகப் பெரிய மாற்றங்கள் நிறைந்ததாக இருந்தது. இந்து மதத்தில் மட்டுமல்லாமல் முஸ்லிம் மதத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பெரும் விவாதங்களுக்கு இடமிருந்தன. இந்த விவாதங்கள் வியக்கத்தக்க அளவிற்கு ஆரோக்கிய மானவையாகவும், ஜனநாயகத் தன்மையுடனும் இருந்த நிலையை இனி பார்ப்போம்.

2

தேவ்பந்த் மதரஸா

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி இங்கு நடை பெற்ற சில முக்கிய விவாதங் களுக்குச் செல்லுமுன் புனிதப் பிரதி களை வாசித்தல் குறித்த ஒரு சில கருத்துக்களை இங்கே பார்ப்போம். ஏனெனில், மதம் சார்ந்த விவாதங்க ளின் வேர்களை நோக்கிச் சென்றால் புனிதப் பிரதிகளை எவ்வாறு வாசிப் பது என்பது குறித்த மோதலில்தான் போய் முடியும். மிதமான குடியை இஸ்லாம் அனுமதிக்கிறதா இல்லையா என்பது போன்ற இன்றளவும் நடைபெறுகிற விவாதங் களில்கூட, அனுமதிக்கிறது எனச் சொல்பவர்களும், இல்லை என மறுப்பவர்களும் இரு சாராருமே திருக் குர்ஆன், ஹதீஸ் போன்றவற்றிலிருந்துதான் மேற்கோள் காட்டுகின்றனர்.

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மதத்தின் மொழியும், இலக்கியத்தின் மொழியும், அறிவியலின் மொழியும் கணிதத்தின் மொழியும் – எல்லாம் ஒன்றல்ல. ஒரே மொழியிலேயே இவை எழுதப்பட்ட போதிலும் இவற்றின் பொருள்கள் அவை அவற்றிற்குரிய தர்க்கங்க ளால் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஏழு உலகங்கள், எண்ணில் புத்தர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், பல்லாயிரம் இறைத்தூதர்கள் என்று சொல்லப்படுபவை எல்லாம் அவற்றின் பன்மைத் தன்மையை, ஏராள அளவைக் குறிப்பவை தானேயொழிய, அந்த எண்ணிக்கைகளுக்குள் ஏதோ ஒரு விஞ்ஞான உண்மை பொதிந்திருப்பதாக நாம் கருத வேண்டியதில்லை. ஏதாவது ஒரு கணக்குச் சொல்லி அந்த அடிப்படை யில்தான் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது என விளக்க மளிப்பது மேலும் பல இருண்மைகளுக்கே இட்டுச் செல்லும். மத நம்பிக்கைகள் சிலவற்றை விஞ்ஞானப் பூர்வமானவை என ‘நிறுவ முயற்சிப்பதும் இவ்வகைப் பட்டதே. மதத்தின் தர்க்கம் வேறு. விஞ்ஞானத்தின் தர்க்கம் வேறு. மத நம்பிக்கைகளை விஞ்ஞான பூர்வமானது என ‘நிறுவும் முயற்சிக்குப் பின்னணியில் விஞ்ஞான பூர்வமானதே உயர்வானது; சரியானது என்கிற உட் கருத்து ஒளிந்திருப்பதைச் சற்று யோசித்துப் பார்த்தால் விளங்கிக் கொள்ள இயலும். புனித நூற்கள் பலவும் வாய்மொழி மரபில் உரு வானவை. அவை ஓதப்படுவதற்காக அருளப்பட்டவை. ‘வாசித்தல் என்பதும் ஆளுக்கொருவர் கைப் பிரதி ஒன்றை வைத்துக்கொண்டு ‘படித்தல் என்பதும் ரொம்ப வும் பின்னாளைய வழக்கம். சீர்திருத்த கிறிஸ்தவ (டழ்ர்ற்ங்ள்ற்ஹய்ற்ள்) அடிப்படைவாதிகள் பலரும் தாங்கள் புனித விவிலியத்தை ஆரம்ப காலக் கிறிஸ்தவர்களைப் போல் வாசிப்பதாகக் கூறுவர். இடைக்கால வாசிப்புகள் இந்த தொடக்க கால வாசிப்பிலிருந்து பெரிதும் வழி விலகிவிட்டது என்கிற பொருளில் இப்படிச் சொல்வர். ஆனால், வார்த்தைக்கு வார்த்தை பொருள்படுத்தி ஒவ்வொரு விவரமும் இதைக் குறிப்பது எனக் (கண்ற்ங்ழ்ஹப்ப்ஹ் ற்ழ்ன்ங் ண்ய் ங்ஸ்ங்ழ்ஹ் க்ங்ற்ஹண்ப்) கொள்வது 19 ஆம் நூற்றாண்டில் அச்சு உருவான பின்பு வந்த ஒரு நடைமுறை. நவீன காலத்திற்கு முன்பு வரை யூதர் கள், கிறிதுவர்கள், முஸ்லிம்கள் எல்லோரும் மிகவும் உருவக வகைப்பட்ட (ஹப்ப்ங்ஞ்ர்ழ்ண்ஸ்ரீஹப்) விளக்கங்களையே புனிதங்களுக்கு அளித்து வந்தனர். இறைவன் – அல்லாஹ் என்னும் விளிப்பு எண்ணற்ற – எல்லையற்ற (ஐய்ச்ண்ய்ண்ற்ஹ்) பொருளுடையது. அதனை ஒற்றை விளக்கத் திற்குள் சிறைப்படுத்திவிட இயலாது. மறு மலர்ச்சி / இறையியல் புரட்சி என்றெல்லாம் தத்துவவியலில் சொல்கிறார்களல்லவா, எல்லாவற்றிற்கும் மேலாகப் பகுத்தறிவை (தங்ஹள்ர்ய்) வைத்துத் தொழுத காலம் ஒன்று உருவானபோதுதான் எல்லாவிதமான தொன்மங்கள், நம்பிக்கைகள் ஆகியனவும் அறிவுக்குப் பொருந்தாதவையாக ஒதுக்கிவைக்கப் பட்டன. வார்த்தைகளுக்கான நேரடிப் பொருள் என்கிற கருத்தாக்கம் அப்போதுதான் உருவானது.

துல்லியமான தகவல்கள் பொதிந்து வைக்கப்பட்ட வையாகப் புனித நூற்களை அணுகும் வழமையும்கூட இதற்குப் பின்னர்தான் தோற்றம் கொண்டது. புனித நூற்களையும் அருளப்பட்ட இறைமொழிகளையும் ஒரு ‘என்சைக்ளோபீடியா போல, ஒரு தகவல் களஞ்சியம் போல் அணுகும் நிலையும் ஏற்பட்டது. எனவேதான் இறைக் கூற்றுகளைக் கூட விஞ்ஞான பூர்வமானவை, வரலாற்றை வெற்று நிற்பவை என்றெல்லாம் நிறுவ வேண்டிய முனைப்புக்களும் மேலெழுந்தன. அருளப் பட்ட இறைமொழிகளுக்கும்கூட விஞ்ஞானச் சான்றி தழ் தேவை எனப் பகுத்தறிவு சிந்திக்க முற்பட்டது. ஆனால், புனித நூற்கள் அருளப்பட்ட காலத்தில் இந்த நோக்கமில்லை என்பது சிந்தனைக்குரியது. திருக் குர்ஆன் வசனங்கள் அனைத்தும் ‘ஆயத்துகளே. அதாவது ‘டஹழ்ஹக்ஷப்ங்ழ்’. தமிழில் சொல்வதானால் நீதிக் கதைகள், உருவக மொழிகள். சுவனம், நரகம், இறுதித் தீர்ப்பு முதலான பிம்பங்கள் / கருத்தாக்கங்கள் கூட ஆயத்துகளே. குறியீடுகள் மூலமாகவும் அடையாளங்க ளின் வழியாகவும் மட்டுமே உணர்ந்து கொள்ளத்தக்க அற்புதங்கள் அவை. சொர்க்கம் என்றால் அங்கே தேவ மகளிரின் நடனம், அமிர்தம் என்றெல்லாம் ஒரு துல்லிய மான, தூலமான வரைபடத்தை நாம் இவற்றினூடாக உருவாக்குதல் சாத்தியமில்லை. புனித நூற்களை இப்படியாக வாசித்து, இன்னதைச் செய்தால், இத்தகைய பணிகளில் உயிர் நீத்தால் சொர்க்கத்தில் இத்தகைய இன்பங்களை நீ அனுபவிப்பாய் எனப் புனித நூற்கள் வாக்குறுதி அளிப்பதாகச் சொல்வது சரியாக இருக்க இயலுமா?

புனித நூற்கள் ஓதுதற்காக உருவானவை; அவை காதுகளுக்குரியவை. கண்களுக்குரியவை அல்ல என நான் சொல்ல வரவில்லை. ஆனால், ஆளுக்கொரு பிர தியை கையில் வைத்துக்கொண்டு, ஏதோ ‘டென்னிஸ் விளையாடுவதைப்போல் இறை வசனங்களை ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடுவதன் மூலம் இறுதி உண்மையைக் கண்டடைந்துவிடுவதிலுள்ள சிக்கலை நோக்கியே நான் கவனம் ஈர்க்கிறேன். ‘ஓதுவீராக என்றுதான் திருக்குர்ஆன் தொடங்குகிறது. ‘குர்ஆன் என்றாலே ‘ஓதப் படுவது என்பதுதான். திருக்குர்ஆன் பொருள்படுவதில் ஒலி அமைப்பின் (நர்ன்ய்க் டஹற்ற்ங்ழ்ய்) பாங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு வச னம், இன்னொன்றுடன் தொடர்புபட்டுப் பொருள் உருவாவதில் இந்த ஒலிப்பாங்கு முக்கிய இடம் பெறுகிறது. புனித நூற்களின் இன்னொரு முக்கிய பண்பு அவை கூடி ஓதப்படுபவையாக உள்ளது. தொழுகையினூடாக அவை வாசிக்கப்படும்போது அவற்றைப் பொருள் தேடலில் உணர்வின் பங்கு மூளையின் பங்கைக் காட்டிலும் பிரதானமாகிறது. அழகியலும், அற உணர்வும் அங்கே அறிவைக் காட்டி லும் முக்கியப் பங்கு வகிக்கிறது. புனித நூற்களைப் பொருளுணர்வதில் இன்னொரு மிக முக்கியமான அம் சம், அவற்றை ஒட்டுமொத்தமாய், முழுமையாய்ப் பார்க்க வேண்டும் என்பது. ஏதேனும் ஒரு பகுதியைத் தனித்து எடுத்துப் பிரித்துப் பொருள் கோருதல் தவறுகளுக்கும், முரண்பாடுகளுக்கும் இட்டுச் செல்லும். தனியாக அமர்ந்து வாசிக்கும்போதுதான் இத்தகைய ‘நங்ப்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் தங்ஹக்ண்ய்ஞ்’ என்கிற தவறும் சாத்தியமாகிறது. புனித விவிலியத்தை வாசிப்பவர்கள் மலைப் பிரசங்கத்தை விட்டுவிட்டு ‘ஆர்ர்ந் ர்ச் தங்ஸ்ங்ஹப்ன்ற்ண்ர்ய் ஐ மட்டும் தேர்வு செய்தார்களேயானால் அவர்கள் சிலுவைப் போரை யும், கிறிஸ்தவ அடிப்படைவாதத்தையும் நியாயப் படுத்துவதிலேயே போய் முடிவர்.

புனித நூற்களை ஒட்டுமொத்தமாய், முழுமையாய் வாசிக்க வேண்டுமெனத்தான் திருக்குர்ஆன் வற்புறுத்து கிறது.

”குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர். அதனுடைய வஹீ முழுமையாக நமக்கு நிறைவு பெறுவதற்கு முன்பே (அதை ஓத நீர் அவசரப்படாதீர்). ‘என் இறை வனே எனக்கு அதிகமான ஞானத்தை வழங்குவா யாக என்றும் இறைஞ்சுவீராக (20:114)

l l l

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென் ஆசியா (இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம்) மிகப் பெரிய மாற்றங்களைச் சந்திக்க நேர்ந்ததை நாம் அறிவோம். தென் ஆசியச் சமூகங்கள், மதங்கள், நிறுவனங்கள் எல்லாமே பல நெருக்கடிகளைச் சந்தித்தன. அதிவேக மாகக் காட்சிகள் மாறியதாக அமைந்த வரலாற்றோட் டம் ஏராளமான புதிய கேள்விகளை முன்வைத்தது. அவற்றை எதிர்கொள்வதற்குத் தக தம்மைத் தகவ மைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எல்லோருக் கும் ஏற்பட்டது. முஸ்லிம் சமூகமும், உலமாக்களும் இந்த அழுத்தங்களை நிறையவே உணர்ந்தனர். பல் வேறு இஸ்லாமிய இயக்கங்களும் உருவாயின. புதிய சூழல்கள் உருவாக்கிய நெருக்கடிகளிடையே மரபு வழி நின்று மத வழிகாட்டல்களையும், அறிவுரைகளையும் (பத்வா) அளிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் உலமாக்க ளுக்கு உருவாயின. மிகப் பெரிய அரசியல் இழப்புகள்; அரசமைவு, நீதித்துறை, சமூக அமைப்பு ஆகியவற்றில் காலனியம் உருவாக்கிய மாற்றங்கள்; இந்து-முஸ்லிம் வகுப்புவாதப் பிரச்சினைகள்; முஸ்லிம்கள் முஸ்லிம்கள் அல்லாதவர்க ளுடன் பல்வேறு களங்களில் போட்டியிட வேண்டிய நிலைமை ஆகியன இந்நெருக்கடிகளின் பின்னணியாக இருந்தன எனலாம். ஆங்காங்கு தல அளவில் அமைந்தி ருந்த தர்ஹாக்களைச் சார்ந்த சூபி பீர்கள், நக்ஷபந்தி சூபி வழிப்பட்ட டெல்லி உலமாக்கள், பரங்கி மஹால் (லக்னோ) உலமாக்கள் முதலியோர் இந்த நெருக்கடிகள் உருவாக்கிய கேள்விகளுக்கு எதிர்வினையாற்றினர். ஒரு பக்கம் தேவ்பந்த் மதரஸா (1867), இன்னொரு பக்கம் அலிகார் முஸ்லிம் கல்வி இயக்கம் ஆகியன உருவா யின. தேவ்பந்த், பரேல்வி, அஹ்லே ஹதீஸ் வழி வந்த உலமாக்களுக்கிடையே பல முக்கிய விவாதங்கள் ஏற் பட இச்சூழல் வழிவகுத்தது.

இந்த விவாதங்களுக்குள் போவதற்குமுன் ஒன்றைச் சொல்லவேண்டும். மேற்குறித்த நெருக்கடிகளுக்கான முஸ்லிம்களின் எதிர்வினையைப் பொதுவாக இப்படிச் சொல்லுவதுதான் வழக்கம். 1. காலனிய நிறுவனங்களுடனும், ‘உலக மொழியா கிய ஆங்கிலத்துடனும் நேரடியாகத் தொடர்புடைய நவீனத்துவச் சிந்தனையாளர்களின் எதிர்வினை. (உ.ம்): சர். செய்யத் அஹ்மது கான் -ஆங்கிலோ முகமதிய கல்லூரி, அலிகார். (நவீனத்துவம் (ஙர்க்ங்ழ்ய்ண்ள்ம்) என்கிற சொல் இங்கே தத்துவார்த்த அழுத்தத்துடன் குறிப் பிடப்படுகிறது). 2. மதச் சிந்தனைகளிலும் அமைப்பிலும் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான எதிர்வினைகள். இதனை நவீனத்துவம் என்கிற வகைப்பாட்டிற்குள் அடக்காத தோடு, பிற்போக்குத்தனமான அடிப்படைவாத எதிர் வினையாக வரையறுப்பதே வழக்கம். ஆனால், தேவ் பந்த் தாருல் உலூம் நிறுவனத்தைப் பற்றி மிக விரிவாக ஆய்வு செய்துள்ள பார்பாரா டி. மெட்காப் இக் கருத்தை வன்மையாக மறுக்கிறார்.

”முஸ்லிம்கள், குறிப்பாக ‘முல்லாக்கள் எனச் சொல்லப்படுவோர், பலராலும் குறிப்பிடப்படுவது போல், வெறும் குருட்டுத்தனமான பிற்போக்காளர் களைப் போலன்றி நவீன உலகின் பிரச்சினைகளா கவே இவற்றை எதிர்கொண்டனர். மரபு வழிப்பட்ட கல்வியைப் பெற்றிருந்த முஸ்லிம் தலைமை வெறும் வரட்டுத்தனமான கொள்கை வெறியர்களாக இல்லா மல் தமது சமூக அரசியல் நடவடிக்கைகளில் ரொம்ப வும் நடைமுறை சார்ந்தவர்களாக (டழ்ஹஹ்ம்ஹற்ண்ஸ்ரீ) விளங்கினர். என்று சொல்லும் பார்பாரா தங்களுக்கிருந்த எல்லா விதமான இக்கட்டுகளுடனும் அன்று வாய்த்த சாத்தி யங்களை அவர்கள் எதிர்கொண்டனர் என்கிறார். இந்த நடைமுறை சார்ந்த தன்மையின் விளை வாகவே காலனிய காலத்திலும் சரி, சுதந்திர இந்தியாவி லும் சரி இங்கே ஒரு ‘இஸ்லாமிய அரசியல் (அதாவது அருளப்பட்ட கோட்பாடுகளினடியாகக் கட்டமைக்கப் பட்ட அரசியல்) உருவாகவில்லை என்றும் அவர் கூறு கிறார். பாகிஸ்தான் பிரிவினைக்கான இயக்கத்தையும் கூட ‘இஸ்லாமிய அரசியல் என வகைப்படுத்த இயலாது, அது ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயகக் குறிக்கோள் கொண்ட இயக்கம் என்றும் பார்பாரா சொல்வார். பிரிவினைக்குப் பின் அங்கே ஒரு இஸ்லாமிய அரசு வேண்டும் என்கிற குரல்கள் எழுந்தது வேறு விஷயம். நிற்க, ஆக, நவீனத்துவ சூழலுக்குரிய வகையில் பிரச்சி னைகளை எதிர்கொள்ள தமது நம்பிக்கைகளின் வர லாற்று மரபுகளைப் புதுப்பித்துக் கொள்வதும் சிந்த னைக்குள்ளாக்குவதுமாகவே அன்றைய உரையாடல் கள் அமைந்தன. இதே உரையாடல்கள் முஸ்லிம்களுக் கிடையே மட்டுமின்றி இஸ்லாமியப் பிரதிகளுடனும், குறியீடுகளுடனும் கூடத் தனி நபர்களாலும், குழுக்களா லும் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கத்திய மாதிரியில் தமது அரசியல், பொருளா தாரம், சமூகம் என அனைத்தையும் தகவமைத்துக் கொள்வதுதான் ‘நவீனத்துவம் என்று கூறுவதே வழக் கம். மேற்குடனான நேரடித் தொடர்பு மூலமே இது சாத்தியம் என்றும் சொல்லப்படும். இந்தக் கருத்தைப் பொய்யாக்கும் எடுத்துக் காட்டுகளில் ஒன்றாக விளங்கு கிறது தேவ்பந்த் நிறுவனம் என பார்பாரா சொல்வதற் கான காரணங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். ‘மரபு (பழ்ஹக்ண்ற்ண்ர்ய்ஹப்) என்பதுங்கூட நவீனத்துவத்தின் வரையறையின் ஒரு கூறாக ஆகும் நிலைக்கும் தேவ்பந்த் ஓர் எடுத்துக்காட்டு.

சட்டா மஸ்ஜித் எனப்படும் ஒரு பழைய மசூதியி லுள்ள ஒரு மாதுளை மரத்தின் கீழ் மிக எளிமையாகத் தொடங்கப்பட்டதுதான் தேவ்பந்த் மதரஸா. தொடக்கம் முதலாகவே இந்நிறுவனம் அதற்கு முந்தைய மதரஸாக் களை மாதிரியாகக் கொள்ளாமல் நவீன பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்களின் வடிவில் கட்டமைக்கப்பட்டது. லக்னோவிலுள்ள புகழ்பெற்ற பரங்கி மஹால் உட் பட முந்தைய நிறுவனங்கள் குடும்ப நிர்வாகங்களுக் குட்பட்டதாகவும், வீட்டுடன் அல்லது மசூதியுடன் இணைந்ததுமாகவே இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. மிக விரைவில் தேவ்பந்தில் வகுப்பறைகள் மட்டுமின்றி ஒரு பொது நூலகமும் உருவாக்கப்பட்டது. ஆண்டறிக்கைகள் அச்சிட்டு வழங்கப்பட்டன. நவீன நிறுவனங்களுக்குரிய அதிகாரத்துவ அமைப்புடன் (சர்பரஸ்த், மொஹ்தமிம், ஸத்ர் முதர்ரிஸ், முப்தி என் கிற வடிவில்) தாருல் உலூம் தோற்றம் கொண்டது. இந்த நால்வருடன் வேறு ஏழு உறுப்பினர்களும் இணைந்தது ஆலோசனைக் குழு (இர்ன்ய்ஸ்ரீண்ப்)

முதலில் பத்தாண்டுகள் எனவும் பின்னர் ஆறு ஆண்டுகள் எனவும் குறிப்பான கல்விக் காலம் வரைய றுக்கப்பட்டதுடன் இறுதியில், தேர்வுகளும் நடத்தப் பட்டன. ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழாவும் உண்டு. தொடக்க கால நிர்வாகிகள் பலரும் பிரிட்டிஷ் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் கொண்டவர் கள். மூவர் கல்வித் துறையில் உதவி ஆய்வாளர்களாக இருந்தவர்கள். டெல்லி கல்லூரி (ஈங்ப்ட்ண் இர்ப்ப்ங்ஞ்ங்) யில் அனுபவம் பெற்றவர்களும் இருந்தனர். முகலாய காலத் தில் நிதி உட்பட எல்லாப் பொறுப்புகளையும் அரசே கவனித்துக் கொண்டது. புதிய சூழலில் உருவான தேவ் பந்தில் உலமாக்களே எல்லாவற்றையும் அமைக்க வேண்டியதாயிறறு. நவீன சூழலுக்குரிய வகையில் இதை அவர்கள் செயற்படுத்தினர்.

தேவ்பந்திற்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவரான மவுலானா முஹம்மது காஸிம், எட்டு வழிகாட்டு நெறி களை உருவாக்கினார். பொதுக் குறிக்கோளுக்காகத் தனிநபர் நலன்களை விட்டுக் கொடுத்தல், திறந்த மனது, சகிப்புத்தன்மை ஆகியவை வற்புறுத்தப்பட்டன.

”ஆலோசனைக் குழுவினர் எப்போதும் மதரஸா வின் நலனையே மனங்கொள்ள வேண்டும். கருத்துக் களில் பிடிவாதம் எப்போதும் இருக்கக் கூடாது. எனவே, யாரும் தம் கருத்தை வெளிப்படுத்தத் தயக் கம் கொள்ள வேண்டியதில்லை. திறந்த மனத்துடன் மற்றவர்கள் இதை எதிர்கொள்ள வேண்டும்… எனவே, மற்றவர்களின் கருத்துக்கள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில், அது நமக்கு எதிராக இருந்தபோதும், அதை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். மொஹ்தமிம்கள் எப்போதும் ஆலோசனைக் குழு வின் ஆலோசனைகளைக் கேட்டே நடக்க வேண்டும். நிரந்தர உறுப்பினர் தவிர, மதரஸாவின் மீது நல்லெண்ணமுள்ள அறிவுத் திறனுடைய யாருடைய அறிவுரையையும் கேட்டே செயல்படவேண்டும். சில நேரங்களில் மொஹ்தமிம் யாரிடமாவது கேட்காது செயல்பட்டால் அதற்காக அவர் வருத்தப்படக் கூடாது. அதே நேரத்தில் அவர் யாரையும் கேட்கா விட்டால் ஆலோசனைக் குழுவிலுள்ள அனைவரும் அதை எதிர்க்க வேண்டும். மதரஸா ஆசிரியர்கள் இதர வெளியேயுள்ள உலமாக்கள் போலன்றி சுயநல மின்றி, சகிப்புத்தன்மையுடன் ஒற்றுமையாக இருத்தல் அவசியம் என்பன இந்நெறிமுறைகளில் சில. புதிய சூழலில் முஸ்லிம் சமஸ்தானங்களின் இருப்பே கேள்விக்குறியதாக மாறிவிட்டதால் முழுமையாக நிதி விஷயத்தில் சார்ந்திருக்க இயலவில்லை. எனவே, சமஸ் தானங்களிடமிருந்தும் நிலப்பிரபுக்களிடமிருந்தும் வரும் நிதி புதிய நிறுவனத்திற்குப் போதுமானதாக இல்லை. எக்காரணம் கொண்டும் பிரிட்டிஷ் அரசிடம் நிதி பெறவும் அவர்கள் விரும்பவில்லை. எனவே, ஆதர வாளர்களிடம் ஆண்டுதோறும் இவ்வளவு அளித்தல் என்கிற உறுதியைத் திரட்டினர். தபால், மணிஆர்டர் முதலான நவீன வசதிகள் பயன்படுத்தப்பட்டன. கணக்கு வழக்குகள் முறையாக்கப்பட்டன. இரு பெரு நாளில் பலியிடப்பட்ட மிருகங்களின் தோல்கள் நன் கொடையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. தேவ்பந்திற்கு வழங்கப்படும் நிதி ‘ஸக்காத்தாகக் கருதப்படுதல் ஊக்கு விக்கப்பட்டது.

”மதரஸா ஊழியர்கள் தங்களால் இயன்ற வரை யில் நன்கொடைகளை அதிகப்படுத்த முனைய வேண்டும். மதரஸாவின் மீது நல்லெண்ணம் கொண்டவர்கள் மாணவர்களின் உணவுத் தேவை களை உறுதி செய்ய வேண்டும். உண்மையில் உண வின் அளவை அதிகரிக்க அவர்கள் முயல வேண்டும். மதரஸாவுக்கு நிரந்தர வருமானம் இல்லாத வரை யில் அது (இவ்வாறு) விரும்பிய வண்ணம் செயல்படும், இன்ஷா அல்லாஹ். ஜாகிர்கள், தொழில் நிறுவனங் கள், வணிக நலன்கள், பெரும் பணக்காரர்களின் உதவிகள் ஆகியவற்றின் மூலம் மதரஸாவிற்கு ஒரு நிரந்தர வருமானம் வரத் தொடங்கினால் பின் அது அச்சத்தையும், நம்பிக்கையும் இழக்கும்; இறைவனுக் குப் பணிதல் என்கிற நிலை குறையும். அதனால் ஏக இறைவனின் மறைமுக உதவியும் நின்றுபோகும். ஊழியர்களிடையே பிரச்சினை உருவாகும். வருமா னங்கள், வசதிகள் ஆகிய அம்சங்களில் ஒருவகை பற்றாக்குறையே நிலவட்டும். அரசு மற்றும் வசதி படைத்தவர்களின் பங்கேற்பு தீங்கானது.

தனது கொடைகளுக்காகப் புகழை எதிர்பார்க்காத வர்களின் பங்களிப்பு அருளுக்குரியது. இத்தகைய கொடையாளிகளின் நேர்மையே நமது உறுதிப் பாட்டின் அடித்தளம். இவை தேவ்பந்த் மதரஸாவின் நிதிநிர்வாக வழி காட்டு நெறிமுறைகள்.

3

இரண்டு பத்வாக்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங் கள் எல்லாவற்றிலும் பிரதிபலித்ததுபோல் மதம் சார்ந்த செயற்பாடுகளிலும் எதிரொலித்ததைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். இறைவாக்குகளின் வெளிப்பாடாக அமைந்த இறுதி இறைத் தூதரின் வழிநின்று புதிய சூழலுக்கும், புதிய நிறுவனங்களுக் கும் ஏற்ப தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் முயற்சி யாக (தஜ்தீத்) முஸ்லிம் உலமாக்களின் செயற்பாடுகள் அமைந்தன. மதம் தன்னைப் பற்றிய சுயப் பிரக்ஞை கொள்ள வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. ஒரு பக்கம் சூபி தலங்களிலிருந்த பீர்கள், இன்னொரு பக்கம் சக உலமாக்கள், இன்னொரு பக்கம் முஸ்லி மல்லாத இந்தியர்கள் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் ஆகியவர்களோடு விவாதங்கள் புரிவதும் வழிவழி யாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும் துலக்கிக்கொள்வதும் அன்றைய நடைமுறையாகியது. ஒன்றைச் சொல்ல வேண்டும். பிற மதத்தவருடனான விவாதங்களைக் காட்டிலும் சக மதத்தவருடனான விவாதங்களும் உரையாடல்க ளுமே முஸ்லிம்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றன.

ஒரு முஸ்லிமைப் பொருத்தமட்டில் வாழ்க்கை ஒரு ‘சீரியசான விஷயம். தனது இறைநம்பிக்கைகளை யும் (அகாஇத்), மத நடைமுறைகளையும் (இபாதத்), சோதித்துக் கொள்ளும் களம் அது. ஏக இறைவன், இறுதி இறைத்தூதர் மூலமான அவனது அருள்வெளிப் பாடு, இறைத் தூது, இறைத் தூதரின் வழிமுறைகள், மற்றும் போதனைகள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை, தொழுகை, கிப்லா, ஹஜ், நோன்பு, குர்பானி முதலான நடைமுறைகள் ஆகியவற்றிற்கு மறு அழுத்தம் கொடுக்கப்பட்டன. முஸ்லிம்களுக்குள் வெளிப்பட்ட பல்வேறு போக்குகளிலும் காணப்பட்ட பொது அம்ச மாக ‘தஜ்தீத்தைக் குறிப்பிடலாம். ‘ஜிஹாத்தைப் பொருத்தமட்டில் அறத் தூய்மைக்காக தனக்குள் நடத்தப்பட வேண்டிய போராட்டம் என்கிற பொரு ளிலேயே அன்று முன்வைக்கப்பட்டது. அந்த வகை யில் ‘பெரிய ஜிஹாத் (ஜிஹாதே அக்பர்) ‘சின்ன ஜிஹாத் (ஜிஹாதே அஸ்கர்) எனப் பிரித்துப் பார்க்கும் வழக்கமுமிருந்தது.

உள்ளூர் அளவிலான சூபிகளின் அடக்கத் தலங் கள், அவற்றை ஒட்டிய சடங்குகள், திருவிழாக்கள், புனித யாத்திரைகள், புனித நாட்கள் என்பவற்றிலிருந்து விலகி பரந்துபட்ட முஸ்லிம் சமூகம் என்கிற பொது உணர்வும், பொது அடையாளமும் பெறவும் இந்த விவாதங்களும் அவற்றை ஒட்டிய பத்வாக்களும் பயன்பட்டன. இந்த வகையில் அன்று உருவாகியிருந்த அச்சு ஊடகத்தின் பயன்பாடு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. தரங்குன்றியதாயினும் மலிவான விலையில் விற்பதறகு ஏதுவான ‘லித்தோ அச்சுமுறை பெரிய அள வில் பயன்படுத்தப்பட்டது. அரசவை மொழியான பெர்சிய மொழியிலிருந்து விலகி மக்கள் மொழியான உர்துவில் எழுதுதல், அச்சிடுதல், வெளியிடுதல் ஆகி யன உருவாயின. மவுலானா இஸ்மாயில் ஷாஹித் எழுதிய ‘தக்வியத்துல் ஈமான் (தக்வியாத்) மற்றும் ‘சீரத் துல் முஸ்தகீம் ஆகிய நூற்கள் குறிப்பிடத்தக்கன. கல்கத்தா நகரில் மட்டும் ஏழு முக்கிய முஸ்லிம் சீர்தி ருத்த நூற்கள் 1832 இல் புழக்கத்தில் இருந்ததாக அன் றைய பிரிட்டிஷ் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

புகழ்மிக்க இஸ்லாமிய அறிஞரான ரஷீத் அஹமத் கங்கோஹி, ‘தக்வியாத்தைப் படித்துவிட்டு, இரண்டு அல்லது இரண்டரை லட்சம் மக்கள் ‘திருந்தியுள்ள னர் எனக் குறிப்பிட்டார். ‘தக்வியாத்துல் ஈமானுக்கு மறுப்பாக ஹகீம் முஹம்மது சாதிக் அலி எழுதிய ‘தக்வியாத்துல் அகாஇத்தும் (1847-8) வாசிக்கக் கிடைத் தன. மொத்தத்தில், அன்றைய வடமேற்கு மாகாணத் தின் பொதுக் கல்வி இயக்குனராக இருந்த முர்ரே கெம்ப்ஸன் குறிப்பிடுவதுபோல் ”ஒரு மிகப் பெரிய மதப் புத்துயிர்ப்பு முகம்மதியர் மத்தியில் உருவாகி இருந்தது. ஜி.எச். ரவுஸ் என்கிற கிறிஸ்தவ பாதிரி, ”முகமதியர்கள் அச்சின் ஆற்றலை அறியத் தலைப் பட்டுவிட்டார்கள் எனக் கூறினார் (1902). அல் கஸாலி, இப்னு கல்தூன் ஆகியோ ரின் எழுத்துக்கள், முக்கிய முஸ்லிம் அறி ஞர்களின் பத்வாக்கள், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள், அறபு உரைகள், வாழக்கை வரலாறுகள், ஹஜ் குறிப்புகள், ஹிகாயத்துகள், பெண்களுக்கான நூற்கள் என ஏராளமாக வெளிவந்து ஒரு பெரிய அறிவுப் புரட்சியே முஸ்லிம் சமூகத்திற்குள் ஏற்பட்டது. பல்வேறு மட்டங்களில் விவாதங்கள் நடைபெற்றன. பத்து ஹனபி சட்டங்க ளை மேற்கோள் காட்டி இவற்றை திருக் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நியாயப்படுத்த இயலுமா என மவுலானா உஸைன் படாலா என்கிற அஹ்லே ஹதீஸ் நெறியாளர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அப்படி நியாயப்படுத்தினால் ஒவ்வொரு விளக்கத்திற்கும் 10 ரூபாய் பரிசளிப்பதாக வும் அறிவித்தார். மஹ்மூத் ஹஸனின் ‘அதில்லாயே காமிலா என்னும் நூல் மிகவும் எளிமையாக ஹனபி சட்டங்களை நியாயப்படுத்தி எழுதப்பட்டது. ஹதீஸ் களை ஒழுங்காகப் பின்பற்றாதவர்கள் எனவும் ரொம் பவும் வரிக்கு வரியாகப் புனித நூற்களை வாசித்து நேரடி விளக்கங்கள் அளிப்பவர்கள் எனவும் அஹ்லே ஹதீஸ் குழுவினர் விமர்சிக்கப்பட்டனர். இறைவாக்கு அல்லது இறைத்தூதரை முன்வைத்து தம் கருத்துக் களை விளக்கினால் 20 ரூபாய் தருகிறேன் என பதி லுக்குச் சொல்லப்பட்டது. மூன்று நான்கு நாட்கள் நடைபெறுகிற பொது விவாதங்கள் அடிக்கடி நடை பெற்றன. பல சந்தர்ப்பங்களில் அவை ஒவ்வொரு வரும் தத்தமது அணுகல் முயற்சிகளைப் பிரகடனப் படுத்துவதாகவும், எவ்வித இறுதி முடிவுமின்றி கலை வதாகவும் அமைந்தன. பஹ்வல்பூரில் நவாப் தலைமை யில் நான்கு நாட்கள் நடைபெற்ற விவாதமொன்றி லும் தேவ்பந்திகள், அஹ்லே ஹதீஸ்கள், ஷியாக்கள் ஆகியோரோடு நெசரி ஒருவரும் பங்கு பெற்றார். இவ் விவாதங்கள் ரொம்பவும் ஆரோக்கியமாக நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.

விவாதத்தில் ஈடுபட்ட நெறியாளரை ஒரு பொது வான பார்வையில் நான்காக வகைப்படுத்தலாம். 1. தேவ்பந்த் உலமாக்கள் 2. அஹ்லே ஹதீஸ்கள், 3. நத்வி உலமாக்கள் 4. பரேல்வி எனப்படும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள், இவர்களில் நான்காவதாகக் குறிப்பிடப்படும் பரேல்வி உலமாக்கள் மட்டும் உள் ளூர் வழமைகளுக்கும் நடைமுறைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து முன்வைக்கப்பட்ட மாற்றங் களுக்கு எதிராக இருந்தனர். இன்றளவும் முத்தலாக் விஷயத்தில் அகில இந்திய முஸ்லிம் சட்டவாரியத் தில் ஒருமித்த கருத்து உருவாவதில் சிக்கல் ஏற்படுத்து பவர்களாக இவர்கள் உள்ளனர் என செல்லப்படுகிறது. தென் ஆசிய முஸ்லிம் சமூகங்களில் பரவலாக நடை முறையிலிருந்த ஹனபி நெறிமுறையை மறுப்பவர் களாக அஹ்லே ஹதீஸ்கள் இருந்தனர். எல்லாவற்றையும் திருக்குர்ஆன் மற்றும் நபிகளின் வழியில் நின்று பரிசீலிப்பதாக அவர்களின் வழிமுறை இருந்தது. தேவ்பந்திகளின் வழிமுறைகள் இடைப் பட்ட ஒன்றாக இருந்தன. தேவையற்ற இடைச் செருகல்கள் எனக் கருதப்பட்ட வற்றை மட்டும் நீக்கி எல்லோருக்குமான தரப்படுத்தப்பட்ட ஒரு நெறியை உரு வாக்குவதாக அவை அமைந்தன. இந்தப் பின்னணியில் இஸ்லாமிய நம்பிக்கைகள், மத நெறிமுறைகள், நீதி வழங்கு நடைமுறைகள் ஆகியன தொடர் பாக வழங்கப்பட்ட தேவ்பந்த் பத்வாக்கள் அவ்வப் போது நூலுருவாக்கம் பெற்று வெளிவந்தன. தேவ் பந்த் மதரஸாவை நிறுவியவர்களில் ஒருவரும் எல் லோராலும் மதிக்கப்பட்ட இஸ்லாமிய அறிஞருமான ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் பத்வாக்கள் 1906 தொடங்கி தொகுத்து வெளியிடப்பட்டன. 1943 இல் மூன்று தொகுதிகளாக தேவ்பந்த் பத்வாக்கள் வெளி வந்தன. கடைப்பிடிக்கப்படும் வழமைகள், சூபியிசம் சார்ந்த நம்பிக்கைகள் ஆகியவை இவற்றின் முக்கிய கரிசனமாக அமைந்தன.

இவற்றில் மூன்றில் ஒரு பங்கு பத்வாக்கள் சூபி யிசம், ஷரிஅத்தின் முக்கியத்துவம், திக்ர் முதலான வற்றை உரக்கச் சொல்லுதல் போன்ற சில நடைமுறை களின் சரி, தவறுகள், பாதிஹா ஓதுதல், சூபி தலங் களுக்குச் செல்லுதல் ஆகியவை தொடர்பானவை யாக உள்ளன. ஐந்தில் ஒரு பங்கு பத்வாக்கள் தொழுகை முறை, தொழுகை நேரங்கள், உளு செய்தல், ஜனாஸா தொழு கைகள், இமாமின் பண்புகள் ஆகியவற்றைப் பேசு கின்றன. பிற பத்வாக்கள் நோன்பு, திருக்குர்ஆன் ஓதுதல், ஹஜ் யாத்திரை முதலானவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கின்றன. உருதுவில் உள்ள இந்த பத்வாக்களை மூல மொழியில் ஆராய்ந்த பார்பரா மெட்காப், இவை குறித்துக் கூறுகிற சில முக்கிய பண்புகளை முதலில் தொகுத்துக் கொள்வோம். 1. பிரிட்டிஷாரால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைகள், தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை இவை முற்றாக மறுப்ப தில்லை. ஷரிஅத்திற்குப் பொருந்தாதவற்றை மட்டுமே அவை விலக்கின. 2. மாற்றுக் கருத்தை முன்வைப்பவர் களை முத்திரை குத்தி, ஓரங்கட்டும் முயற்சியில் ஈடுபடு வதில்லை. யாரையும் அவசரப்பட்டு பாதை விலகிய வர்கள், காபிர்கள், நம்பிக்கையற்றவர்கள் எனக் கூறி விடுவதில்லை. ”உலகின் பெருமையின் மீது (அதாவது நபிகள் நாயகம்) அன்பு குறைந்தவர்கள் என்பது போன்ற மெல்லிய கண்டனங்களே போதுமெனக் கருதப்பட்டது. 3. தங்கள் வாதத்தை உறுதிப்படுத்துவ தற்காக பெரிய ஆதாரங்கள் எதையும் சுட்டுவதில்லை. ”சாதாரண மக்கள் (அவாம்), கற்றறிந்தோர் (கவாஸ்) இரு சாராரது அறிதல்களுமே குறைபாடுடையவை தான் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. 4. ஒவ்வொரு முஸ்லிமும் ஒரே மார்க்க அறிஞரின் வழி நிற்பது (தக்லீதே ஷக்ஸி), ஒரே ஷேக் அல்லது முர் ஷித்தைப் பின்பற்றுவது என்பதே அவர்களின் நிலைப் பாடு. 5. சில பத்வாக்கள் பன்னிரண்டுக்கும் மேற் பட்ட மார்க்க அறிஞர்களின் கையொப்பங்களுடன் அமைந்தன. 6. ஹனபி வழிமுறைகளின் படியே பத்வாக்கள் வழங்கப்பட்டபோதிலும், சில தருணங் களில் பிற வழிமுறைகளும்கூட மேற்கோள்களாகக் காட்டப்பட்டன. (எ.டு: திருக்குர்ஆனை ஓதும்போது ஒவ்வொரு அத்தியாயத் தொடக்கத்திலும் ‘பிஸ்மில் லாஹ் எனச் சொல்ல வேண்டுமா?) 7. எனினும் பல் வேறு நெறிமுறைகளை இணைத்து ஏற்பது என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு நெறிமுறை உருவா வதைத் தடுக்கும், தவிரவும் எளிதாக உள்ள ஒன்றைக் தேர்வு செய்வதற்கு வழிவகுக்கும் என்பதால் அது பொதுவில் தவிர்க்கப்பட்டது.

1911 தொடங்கி, வழங்கப்பட்ட பத்வாக்கள், வழி காட்டல்கள் ஆகியவை குறித்து பதிவேடு ஒன்றும் உருவாக்கப்பட்டது. தேவ்பந்த் மதரஸாவின் நூற்றாண்டு விழாவின்போது மொத்தத்தில் 2,69,215 பத்வாக்கள் வழங்கப்பட்டிருந்தன.

ஆங்கிலத்தில் எனக்குக் கிடைத்த இரு பத்வாக் கள் கீழே மொழியாக்கப்பட்டுள்ளன:

பத்வா 1. கேள்வி : ”புனித மதீனாவிற்குச் செல்வது அவசியமான இறைக் கடமை (பர்ளு வாஜிப்) அல்ல; ஒரு சிறந்த நடைமுறை (காரே கைர்) மட்டுமே. தவிர வும், தாக்குதல் நடக்கக்கூடிய பழங்குடிகள் நிறைந்த ஆபத்தான வழியில் ஏன் செல்லவேண்டும்? ஏராள மான பணம் வேறு செலவாகிறது? என்று நினைத்து புனித மக்காவிற்கு ஹஜ் செல்லும் ஒருவர் ஒளிவீசும் மதீனாவிற்குச் செல்லாதிருந்தால் அவர் பாவம் செய்தவரா இல்லையா?

பதில் : இத்தகைய அம்சங்களின் விளைவாக மதீ னாவிற்குச் செல்லாமல் வருவது உலகத்தின் பெருமை யின் (ஸல்) மீது அன்புக் குறைவைத்தான் வெளிப் படுத்துகிறது. இத்தகைய அச்சங்களுக்காக யாரேனும் அன்றாட உலகியல் நடைமுறைகளை விட்டுவிடுவ துண்டா? (மதீனா செல்லும்) வழியில் தினசரி கொள் ளைகள் நடப்பதில்லை. எனவே, இதெல்லாம் ஒரு காரணமாக இருக்க முடியாது. மதீனாவிற்குச் செல் வது கடமை அல்ல என்பது உண்மைதான். தொழுகை யின்போது கைகளை உயர்த்தி ‘ஆமீன் என உரக்கச் சொல்வது இந்த (மதீனா) யாத்திரையைக் காட்டிலும் பயனளிக்கக் கூடியது எனச் சிலர் நினைக்கிறார்களே. ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ, உங்களது பெரு மைக்கு இழுக்கு வந்துவிடுமோ என்று கருதிப் போகா மல் இருந்து விடாதீர்கள். இப்படியான அச்சங்கள், எண்ணங்கள் ஆகியவற்றின் விளைவாக போகாமல் இருந்தாலோ, ஒத்திவைத்தாலோ, பின் எதுதான் முழு நம்பிக்கைக்குரியது என யோசித்துப் பாருங்கள். நற் காரியங்களுக்காப் பணம் செலவிடுவது மகிழ்ச்சிக்குரி யது. மக்காவிலிருந்து மதீனாவிற்கு முதல் வகுப்பில் பயணம் செய்தால் 50 ரூபாய்தான் செலவாகும். இறை வனின் ஆசியைக் காட்டிலும் 50 ரூபாய் பெரிது எனக் கருதுபவர் ஐயத்திற்கிடமின்றி நம்பிக்கையி லும் அன்பிலும் குறைந்தவர்களே. அப்படிச் செல்லா தவர் பாவம் செய்யவில்லையாயினும் அடிப்படைக ளில் நம்பிக்கை குறைந்தவர்களே. -முற்றும். வல்ல இறைவன் எல்லாம் அறிவான். ரஷீத் அஹமத் மன்னிக்கப்படட்டும். பத்வா 2. கேள்வி : அல்லாஹ்வின் அருள்மொழி கள், ஹதீஸ்கள், உரைகள் ஆகியவற்றைப் போதிப்பது போன்ற இறைப் பயன்பாடுகளை நிறைவேற்றிக் கொண்டு ஒருவர் உள்ளார் என்போம். நன்றிக்குரிய அவர் இருக்கின்ற தொழுகைத் தலங்கள் நிரம்பி வழி கிறது என்போம். அவர் இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு இந்த இறைப் பயன்பாடுகளைச் செய்வது நல்லதா? அல்லது புனிதத் தலங்களுக்கு ஹிஜ்ரத் செய்வது நல்லதா? (அஸீஸுத்தீன் சாகிப், மொராதிபாதி, 1311/1893)

பதில் : கற்றறிந்த இம்மனிதரின் மதத்திற்கு எந்தத் துன்பமும் இல்லை, மக்கள் அவரால் மார்க்கப் பயன் பாடுகளை அடைகின்றனர் என்றால் அவர் அறபு நாட்டிற்கு ஹிஜ்ரத் செய்வதைக் காட்டிலும் இங்கே இருப்பதே சிறந்தது. வல்ல அல்லாஹ் எல்லாம் அறி வான். ரஷீத் அஹமத் மன்னிக்கப்படட்டும்.

இவ்விரு பத்வாக்களும் 1893 இல் அளிக்கப் பட்டவை. இரண்டாவது பத்வாவுக்குக் காரணமான அஸீஸுத்தீன் இவ்வாறு பல கேள்விகளை எழுப்பி ஏராளமான வழிகாட்டுதல்களைப் பெற்றுள்ளார். இவ்விரு பத்வாக்களையும் வழங்கிய மவுலானா ரஷீத் அஹமத் கங்கோஹி (1829-1905) ஹதீஸ்களிலும் ஹனபி நெறிகளிலும் துறைபோகியவர். சிஷ்தி சபிரி மரபின் ஆன்மிக வழிகாட்டியாகக் கருதப்படுபவர். அவரது பத்வாக்களில், இங்குள்ள முதல் பத்வா வில் உள்ளதுபோல் மெல்லிய நகைச்சுவை இழையோ டுமே ஒழிய, காழ்ப்பு இருக்காது. சரியான நடைமுறை களையும், நம்பிக்கைகளையும் நுணுக்கமாக விளங்கிக் கொள்வதற்கும், பொதுமையாகக் கடைப்பிடிப்பதற் கும் இத்தகைய பத்வாக்கள் பயன்பட்டன. ரஷீத் அஹமத் அவர்கள் எந்த முக்கிய அதிகாரப் பதவியிலும் இருந்ததில்லை. பத்வா வழங்குபவர்களின் துறை சார்ந்த அறிவு, அறவாழ்வு, ஏதேனும் ஒரு குறிப்பான நெறிமுறையுடன் அடையாளம் காணுதல் ஆகியனவே அவர்களுக்கு இதற்குரிய தகுதியை வழங்கின.

4

முஸ்லிம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

பத்தொன்பதாம் நூற்றாண்டு விவா தங்களில் பெண்களின் நிலை தொடர் பான அணுகல் முறை முக்கிய பங்கு வகித்ததை அறிவோம். சிந்துச் சமூகத் தில் இரண்டறக் கலந்திருந்த பால்ய மணம், விதவைக் கொடுமை, உடன் கட்டை ஏறுதல், பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுதல் ஆகியவற்றிற்கு எதிராக அன்றைய சமூக சீர்திருத்தவாதிகள் குரல் எழுப்பினர். ராஜாராம் மோகன்ராய், கேசவ சந்திரசென் முதலானோர் இவ் வகையில் குறிப்பிடத்தக்கவர்கள். இங் குள்ள சாதியப் பிரச்சினைகளைக் கணக்கில் கொள்ளாமல் புதிய சூழலுக்கு ஏற்ற உயர்சாதி நடுத்தரவர்க்கப் பெண் களை உருவாக்குவது இவர்களின் கரிசன மாக இருந்தது. காட்டுமிராண்டித்தனங் களை ஒழித்து இந்தியத் துணைக் கண் டத்தில் நாகரிகத்தை நிலைநாட்ட வந்த தாகக் கூறி இதன்மூலம் தங்களின் சுரண் டலை நியாயப்படுத்த முனைந்த வெள்ளை ஆட்சியாளர்கள் இந்த வகையில் இந்தச் சீர்திருத்தவாதிகளுக்கு முழு ஒத்துழைப் பையும் நல்கினர். புதிய சூழலுக்குத் தகுந்த, கட்டுப்பெட்டியாக இல்லாத, விருந்தினர்களுடன் அளவளாவக் கூடிய பிள்ளைகளை நன்கு வளர்க்கக் கூடிய மரி யதைக்குரிய மத்தியதர வர்க்க வீட்டுப் பெண்களை உருவாக்குவதே இவர்களின் திட்டமாக இருந்தது. பெண்கள் விஷயத் தில் இவர்கள் பெரிய விமர்சனங்களின்றி ஐரோப்பிய மாதிரியை ஒரு குறிப்பிட்ட எல்லைவரை ஏற்றுக்கொண்டனர். பெண்க ளுக்கு பொதுப் புலத்தில் (டன்க்ஷப்ண்ஸ்ரீ நல்ட்ங்ழ்ங்) இடமளிப்பது குறித்து இவர்களுக்கு தயக் கங்கள் இருந்தபோதிலும் வீட்டுக்குள் நவீனமான தன்மையுடன் உலாவரக் கூடிய ‘புதிய இந்துப் பெண்களைக் கட்டமைப்ப தில் இவர்கள் முன்நின்றனர்.

காலனியம் உருவாக்கிய புதிய சூழலை எதிர் கொண்ட நிலையில் முஸ்லிம் சமூகத்திற்குள் நடை பெற்ற விவாதங்களைத்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண்கள் நிலை குறித்த விவாத மும் இதில் பிரதானமாக அமைந்தது. புதிய சூழலுக் குரிய புதிய பெண்களை எவ்வகையிலும் முஸ்லிம் மரபுகளிலிருந்து விலகாமல் கட்டமைப்பது என்கிற முயற்சியில் வழக்கம்போல் பல்வேறு போக்குகள் இருக்கவே செய்தன. ‘மரபு என்பது அவ்வப்போது மாற்றம் கொண்டும், தற்காலத் தோற்றம் கொண்டும் வெளிப்படுவதுதானே. எனவே இதில் எந்தச் சரடை உருவி இன்றைய நோக்கில் ஒரு வரையறையைச் செய் வதில் இத்தகைய கருத்து வேறுபாடுகளும், அணுகல் முறை வேறுபாடுகளும் கூடத் தவிர்க்க இயலாதவை தானே. இந்த வேறுபாடுகளுக்கூடாகச் சில பொதுமை களும் இருக்கவே செய்கின்றன. எல்லாவற்றையும் இழை பிரித்துப் பார்ப்பது அவசியம். இவற்றைப் பார்ப்பதற்கு முன்பாக, இதற்கு முன் முஸ்லிம் மரபில் பெண்கள் பொதுவாக எவ்வாறு அணுகப்பட்டு வந்தனர் என்பதையும் நாம் நினைவு படுத்திக்கொள்வது நல்லது. முஸ்லிம் அடையாளங் களான மசூதி, கான்கா முதலியன ஆண்களோடு மட் டுமே அடையாளம் காணப்பட்டு வந்ததை நாம் அறி வோம். அரபுக் கல்வியும் கூட ஆண்களுக்குரியதாகவே இருந்தது. இஸ்லாமிய அடையாளங்களை உறுதியாக வெளிப்படுத்துபவையாக முஸ்லிம் ஆண்களுக்கான பெயர்கள் அமைந்தபோது பெண்களின் பெயர்களில் பல இத்தகைய அடையாளங்களைக் காட்டிலும் ‘நற் பண்பு மிக்கவள், ‘அன்புக்குரியவள் முதலான பொருள் களிலும் மலர்கள் முதலியவற்றைக் குறிப்பதாகவுமே அமைந்திருந்தன.

தவிரவும் பெண்களைப் பொதுவாக இறுக்கமான ஒழுங்கமைப்பிற்கு ஒவ்வாதவர்களாக (பித்னா) கருது வதும் வழக்கமாக இருந்தது. நபிகளின் காலத்திற்கு முந் திய ‘ஜாஹிலியா எனப்படும் இருள் காலத்தின் எச்சங் கள் அவர்களிடம் மிகைத்திருந்ததாகவும் கருதப்பட்ட னர். ‘கபஸ்நாமா, ‘அக்லாக் கீ நஸ்ரி முதலான மேற் தட்டு வர்க்கத்தினரால் அதிகம் வாசிக்கப் பட்ட பெர்சிய மொழி அறநூற்கள் இவ் வகையில் அமைந்தன. தனது ‘துஹ்பாஏ நஸாஇ நூலில் யூசுப் காடா,

‘குட்டையான கொழுத்த பெண்ணையோ, ஒல்லியான உயரப் பெண்ணையோ நீ ஒரு போதும் மணக்காதே;

உன்னிலும் வயதுமிக்கவளை மணக் காதே; அவள் பெற்றுத் தரும் மகன் மோச மானவனாக இருப்பான். அழுமூஞ்சிப் பெண்ணையோ, ரோம மடைந்த கால்களை உடையவளையோ மணக்காதே; அவளைத் தவிர் குதிரைபோல் கால்களையும், பாதங்களையும் உயர்த்தி நடப்பவள் உன்னைத் துன்பத்திற்கு உள்ளாக் குவாள் என்பார். ஒரு பெண் மென்மையாகப் பேச வேண்டும். குறை சொல்லக் கூடாது. அனுமதியின்றி வெளியே செல்லக் கூடாது. கணவனுக்கு முன் உணவருந்தக் கூடாது. மனைவியரால் உள்ள பிரச்சினைகளைப் பட்டியலி டும் யூசுப் காடா, இவற்றிலிருந்து விடுபட வைப்பாட்டி வைத்துக்கொள்ளச் சொல்லவும் தயங்கவில்லை. ஷரியத் த இறுக்கமாகக் கடைப்பிடிப்பதாகச் சொன்ன நீதிமான்களோ பெண்கள் ஆண்களிடமிருந்து அதிலும் குறிப்பாக திருமண வயதுள்ள ஆண்களிடமிருந்து ஒதுக்கிவைக்கப்பட வேண்டும் என்றன.

இந்தப் பின்னணியில்தான் 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நடைபெற்ற விவாதங்கள் அமைந்தன என்பதை நாம் மனங் கொள்ளத் தவறலாகாது. பெண்களை அறிவுமிக்கவர்களாக்குவது, அவர்களிடம் கலந்துபோயுள்ள அப்பாவித் தனங்களை யும் உணர்ச்சி சார்ந்த கூறுகளையும் (நப்ஸ்) நீக்கி அவர் களை நல்லறிவு மிக்கவர்களாக (அக்ல்) ஆக்குவது என் பன பொதுநோக்கங்களாக இருந்தன. இந்த விவாதங்களி னூடாக வெளிப்படும் மூன்று விதமான போக்குகளை இங்கே தொகுத்துக்கொள்வோம். உள்ளூர் வழமைகள் இஸ்லாத்திற்குப் பொருந்தாத சில பண்புகளை முஸ்லிம் களிடம் இணைத்துள்ளன என்பதால் அவற்றை நீக்கு வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டன. 1, உலமாக்களின் அணுகல் முறை: பெண்களுக் கும் ஆண்களுக்கும் ஒரே வழி’ 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முஸ்லிம்கள் மத்தியில் கல்விப் பெருக்கம் ஏற்படுவதில் உலமாக்க ளின் பங்களிப்பை முன்பே குறிப்பிட்டேன். இந்தப் பங்களிப்பு ஒரு குறிப்பிட்ட அளவு பெண்களை நோக்கியும் சென்றது. ஐரோப்பியப் பெண்கள் அல்லது இந்துப் பெண்களுடன் ஒப்பிட்டு அவர்களின் பண்புகள் எத்தனை மோசமானது என்றோ, இல்லை வியந்து பாராட்டக் கூடியவை என்றோ கூறி அந்த அடிப்படையில் முஸ்லிம் பெண்களின் முன்னேற்றம் குறித்து உல மாக்கள் பேசவில்லை என்பது இங்கே வலியுறுத்திச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. பொதுவாக அன்று அவர்கள் ‘வெளியிலிருந்த எதிரி களைக் காட்டிலும் உள்ளுக்குள் இருந்த குறைபாடுக ளையே விமர்சிக்கத் தக்கதாகவும், நீக்கத் தக்கதாகவும் பார்த்தனர். மேற்தட்டு முஸ்லிம் பெண்கள் மத்தியிலி ருந்த இஸ்லாத்திற்குப் பொருந்தாத நடவடிக்கைகள், ஆடம்பரங்கள், சடங்குகள் ஆகியவை விமர்சனத்திற் குள்ளாயின. லௌகிகத்தில் மட்டுமின்றி அறவாழ்வி லும் அவர்கள் உயர்நிலை அடைய வேண்டும் என்பதே உலமாக்களின் நோக்கமாக இருந்தது.

பெண்களின் கல்விக்கு அவர்கள் முக்கியத்துவமளித் தனர். புனித நூற்களை கற்றொழுகுவதற்கு அது அவசி யம். கணவனுக்குரிய மற்றும் வீட்டுக்குரிய கடமைக ளைச் செய்தலே பிரதானப்படுத்தப்பட்ட போதிலும், பொது வாழ்வில் பங்குபெறுதல் இக்கடமைகளில் குறை ஏற்படுவதற்குக் காரணமாகும் என்பதும் கூடவே சுட்டிக் காட்டப்பட்ட போதிலும் ஆண்களும், பெண்களும் சாராம்சமாகவே வேறு வேறானவர்கள் என்றோ, பெண்கள் ஆண்களுக்குக் கீழானவர்கள் என்றோ உல மாக்கள் கூறவில்லை என்பதும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று.

இந்த வகையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு நூல் மவ்லானா அஷ்ரப் அலி தானவியின் புகழ் பெற்ற ‘பெஹிஷ்தீ ஸேவர். பல லட்சம் பிரதிகள் இது வரை விற்பனையாகியுள்ள இந்நூல் திருமணமான பெண்களுக்கு வழங்கப்படும் முக்கிய சீதனங்களில் ஒன்றாக இருந்தது.

பெண்கள், ஆண்கள் இருவரையும் ஒரே மாதிரி சாத்தியங்கள் கையளிக்கப்பட்டவர்களாகவே கண்ட தானவி, ‘அக்ல்க்கும், ‘ந ப்ஸ்க்குமான போராட்டம் இருவருக்கும் பொதுவானதே என்றார். ‘நப்ஸ் கூறுகள் பெண்களிடம் சற்று மிகுந்துள்ளது என்றால் அது பாலி யல் அடிப்படையிலான ஒரு சாராம்சப் பண்பு அல்ல. மாறாக, அது கலாச்சார ரீதியாகக் கலந்துபோனதே. உரிய பயிற்சி மற்றும் கல்வி மூலம் களையப்படக்கூடி யதே. பெண்கள் அரபி கற்றுக்கொள்ள வற்புறுத்திய தானவி, ”அல்லாஹ் விரும்பினால் வெகு விரைவில் நீங்கள் ஒரு மவ்லவியாக முடியும். அரபியில் அறிஞராக முடியும்… பத்வாக்கள் வழங்க இயலும் என்றார். பெண்களை நோக்கி அவர் சொன்ன இம்மொழிகள் முக்கியமானவை. வேறு யாரும் பயன்படுத்தத் தயங்கும் சொற்களை தானவி எளிதாகச் சொன்னார். பாதுஷா, ஹகீம், உஸ்தாத், ஆலிம், சர்தார், புஸ்ருக் முதலான சொற்களாலும் அவர் பெண்களைக் குறிப்பிட்டார். மாதிரிப் பெண்களாக அவர் சுட்டிக்காட்டியவர் களில் பாத்திமா மட்டுமின்றி, ஏவாளும், மேரியும் இருந்தனர். ஏவாளைப் பாவத்திற்குத் தூண்டியவளாகவே சொல்லப்படும் மரபை மீறி அவரை மேன்மைக்குரிய வராகச் சொல்லுதல் கவனிக்கத்தக்கது. ”பெண்களுக்காக ‘பெஹிஷ்தீ ஸேவரை எழுதியுள் ளீர்கள். இதேபோல் ஆண்களுக்கு ஒன்று எழுதுங்களேன் என அவரிடம் சொன்னபோது, ”இதுவே அவர்களுக் கும் பொருந்தும் என்று பதிலளித்தார். தொழுகை நடை முறைகள் குறித்த பின்னிணைப்புப் பின்னர் சேர்க்கப் பட்டது. 1. உருது கற்றல், 2. மதக் கடமைகளைச் சரிவர நிறைவேற்றல், 3. வீட்டை ஒழுங்காக அமைத்தல், 4. குழந்தைகளை நற்பண்புடையவர்களாக வளர்த்தல், 5. அவரவர்க்குரிய மரியாதைகளையும், இடத்தையும் அளித்தல் 6. எழுதப் படிக்க அறிந்தவளாதலால் நேரடி யாகப் பிரச்சினைகளை அவளே கையாளுதல் ஆகியன நல்ல பெண்களின் பண்புகள் என்பதே தானவியின் கருத்தாக இருந்தது.

2, முஸ்லிம் சமூகத்திலுள்ள குறைபாடுகளை எண்ணி நாணப்பட்ட சமூக சீர்திருத்தவாதிகள்

பெண் கல்வி, இஸ்லாமிய மரபுகளை அறிதல் முத லானவற்றிற்கு இவர்களும் அழுத்தமளித்தபோதும் ஐரோப்பியப் பெண்களிடம் காணப்பட்ட முன்னேற்றக் கூறுகளின்பால் இவர்களுக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது. ஐரோப்பியர்கள் முன்வைத்த விமர்சனங்களை இவர்கள் கணக்கில் கொண்டனர். பலதார மணத்தை இவர்கள் கண்டித்தனர். (தானவி இது குறித்துப் பேசவே இல்லை) பர்தா முறை குறித்தும் அவர்களுக்குக் கூச்சமிருந்தது. ஓரளவு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் இவர்கள் இணைந்து செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

செய்யித் மும்தாஜ் அலி (1860-1935) தனது மனைவி யுடன் நடத்திய ஆங்கில இதழ், பலதார மணம், பர்தா முறை, திருமண வயது, பெண்களின் சம்மதம், மனைவி யின் கடமை, கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டது. பெண்களின் சாட்சி யங்களை ஏற்கக் கூடாது எனத் திருக்குர்ஆன் கூறுகிறது என்றால், சமூக நிலை அவளுக்கு உரிய அனுபவத்தை மறுப்பதால்தான் அப்படிச் சொல்கிறது. மற்றபடி இத னால் பெண்கள் கீழானவர்கள் எனக் கருதப்பட வேண்டிய தில்லை என இவ்விதழ் விளக்கமளித்தது. செய்யித் அகமதுகான் (அலிகர்) முதலானோர் மும்தாஜ் அலியு டன் துணை நின்றனர். பெண் கல்விக்கு அகமதுகான் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கவில்லையாயினும் அன்றைய அறிவுஜீவிகளான ஷேக் அப்துல்லாஹ், ஹாலி, நஸீர் அகமது முதலானோர் மும்தாஜ் அலியைப் போல் பெண் கல்வியை வற்புறுத்தினர்.

பர்தா முறையைக் கடுமையாகக் கண்டித்த வங்கத்துப் பெண்ணான ருகையா ஷகாவத் உசேன் (பி. 1880) ஒரு உயரதிகாரியின் மனைவி. இந்துப் பெண்கள் அக்காலத் தில் அடைந்திருந்த முன்னேற்றங்களையும் அவர் சுட்டிக் காட்டினார். ‘சுல்தானாவின் கனவு என்று அவர் எழுதிய புனைவு நூலில் ஆண்கள் அனைவரையும் ஒதுக்கிவிட்டு முற்றிலும் பெண்களாலேயே ஆளப்படும் ஒரு கற்பித தேசம் கட்டமைக்கப்பட்டது. ”ஒரு பைத் தியக்காரன் தப்பிவிட்டான் என்பதால் புத்தி சுவாதீனம் உள்ள எல்லோரையும் அடைத்து வைப்பீர்களா? என்று கேட்டார் ருகையா. கல்வியின் மூலம் ஐரோப் பியப் பெண்கள் அடைந்த முன்னேற்றத்தை வலியுறுத் தியபோதும் மேற்கத்திய ஆண்களாலும், சட்டங்களா லும் பெண்கள் மீது செலுத்தப்படுகிற வன்முறையை யும் அவர் கண்டிக்கத் தயங்கவில்லை.

பட்ங் நல்ழ்ண்ற் ர்ச் ஐள்ப்ஹம் என்கிற நூலை ஆங்கிலத்தில் எழு திய அமீர் அலி இந்த வகையில் குறிப்பிடத்தக்க இன் னொருவர். அன்றைய போர்ச் சூழலின் விளைவாக உருப்பெற்றதே ‘சகிக்க ஒண்ணாத கொடுமையாகிய பல தார மணம் எனக் கூறிய அமீர் அலி, எல்லா மனைவியர்க் கும் சமத்துவத்தை அளிப்பதை வற்புறுத்திய வகையில் இஸ்லாம் நடைமுறையில் ஒருதார மணத்திற்கே இட்டுச் செல்கிறது என விளக்கமளித்தார். எல்லாவிதமான தூய் மைக்கும் உண்மைக்கும் உரிய உன்னதப் பெண்ணாக அவர் பாத்திமாவை முன் வைத்தார். 3, இஸ்லாமிய இயக்கங்கள் புகழ்மிக்க ‘ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தவ ரான மௌலான செய்யித் அபுல் அலா மௌதூதி தனது ‘தர்ஜுமானுல் குர்ஆன் என்னும் உருது இதழில் அவ்வப்போது பெண்கள் பிரச்சினை குறித்து எழுதி வந்தார். மதச்சார்பற்ற கல்வி அமைப்பினூடாக வெளி வந்த மௌதூதி சொந்த முயற்சியில் மதக் கல்வியைப் பெற்று அத்துறையின் மிகச் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தவர். ஐரோப்பியக் கலாச்சாரத்தையும் அதற்குப் பலியான ஐரோப்பியப் பெண்களையும் கடுமையாகச் சாடினார் மௌதூதி. முஸ்லிம் பெண்களின் வாழ்வை இவர் இதற் கெதிராக முன்நிறுத்தினார். எனினும் அவர் முன்னிறுத்தி யது ஒரு லட்சிய முஸ்லிம் பெண்ணின் வாழ்வை என் பது குறிப்பிடத்தக்கது. எதார்த்தத்திலுள்ள நிலையை அவர் எடுத்துக்காட்டாகச் சொல்லவில்லை. தர்ஜுமானில் முதலில் வெளிவந்து, பின்னர் நூலாக பல பிரதிகள் கண்ட ‘பர்தாவும் இஸ்லாத்தில் பெண்கள் நிலையும் என்கிற நூலில் ஒரு அகன்ற வரலாற்றுப் பின்னணியுடன் தொடங்கும் மௌதூதி, பிற எந்தக் கோட்பாடுகளைக் காட்டிலும் இஸ்லாமியக் கோட்பாடே பெண்களுக்கு உன்னத நிலையை வழங்குகிறது என்றார். ஐரோப்பியப் பத்திரிகைகளில் வெளிப்படும் செய்திகள், மருத்துவக் கட்டுரைகள் முதலானவற்றின் அடிப்படை யில் மேற்கத்தியப் பெண்கள் எவ்வாறு இழிந்த நிலையி லுள்ளனர் என்பதை அவர் பல்வேறு எடுத்துக்காட்டுக ளுடன் விளக்கினார். இஸ்லாமியக் கோட்பாடே இயற் கையோடு இயைந்தது எனவும் ஒரு சரியான சமூகக் கட்ட மைப்பை உருவாக்க வல்லது எனவும் வாதிட்டார். கணவன், மனைவியைக் காட்டிலும், ‘இயற்கை யிலேயே உயர்ந்தவன் என இஸ்லாம் கருதுகிறது என் றார் மௌதூதி. கணவனிடமிருந்து தேவைகளைப் பெற்றுக்கொள்வது, சொத்துரிமை, தமது செல்வத்தைத் தானே கட்டுப்படுத்துதல், விருப்பத்தை மீறிய திரு மணத்தை மறுத்தல் (அதே சமயத்தில் குடும்பத்தாரின் விருப்பத்தை மீறிய தேர்வு கூடாது) ஆகிய பெண்ணுரி மைகளை அவர் வற்புறுத்தினார். வீட்டைப் பாதுகாத்துக் கொள்வதே பெண்ணின் கடமை; வீட்டைத் துறந்து அவள் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது. ஆண்க ளைப் போலவே பெண்களுக்கும் கல்வியின் முக்கியத்து வத்தை வற்புறுத்திய மௌதூதி, ஆனால், பெண்களுக் கான சரியான கல்வி அவளை நல்ல மனைவியாக, நல்ல தாயாக, நல்ல குடும்பத் தலைவியாக உருவாக்கக் கூடியதே என்றார். இந்த வகையில் பயனுடைய துறை களையே அவள் கற்க வேண்டும் என்றார். ஆனால் தானவியோ, பெண்களின் வீடு சார்ந்த பணிகளை வற்புறுத்தியபோதும் இவற்றை வீட்டிலேயே கற்றுக் கொள்ளலாம். கல்விக் கூடங்களில் அவர்கள் ஆண்க ளுக்குச் சமமாகக் கற்க வேண்டும் என்று கூறியது நினைவிற்குரியது. ‘பெண்கள் வீட்டின் ராணிகள். பொது அதிகாரத்தை பெண்களுக்கு வழங்கும் சமூகம் அழிந்துபடும் என்றார் மௌதூதி.

பெண்கள் ஆண்களிடமிருந்து சாராம்சத்திலேயே வித்தியாசமானவர்கள் என்பது மௌலானா மௌதூதி யின் கருத்தாக இருந்தது. பெண்கள் இயல்பிலேயே உணர்ச்சிவயப்பட்டவர்கள், உளவியல் ரீதியில் ஆண்க ளுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு உண்டு என்பதை நிறுவ அவர் ஏராளமான ஐரோப்பிய மருத்துவ வல்லு னர்களின் கட்டுரைகளை மேற்கோள் காட்டினார். மாத விலக்கு, கருத்தரிப்பு முதலானவை பெண்களின் மன நிலையில் எத்தகைய விளைவுகளையும் சமநிலைக் குறைவையும் உருவாக்குகின்றன என விளக்கினார். ‘உயிரியல் அடிப்படையில் பெண்கள் குழந்தைகளைப் பெறுவதற்காகவும் வளர்ப்பதற்காகவுமே ஆக்கப்பட்டி ருப்பதால் உளவியல் ரீதியிலும் அவள் இத்தகைய இயற்கைக் கடமைகளுக்குரியவளாகவே ஆக்கப்பட் டுள்ளாள் என்றார் மௌதூதி. ஒரு சரியான சமூகத்திற்குப் பெண்களே ஆதாரமாக இருக்க முடியும். ஆனால், நவீன அரசியலும் கலாச்சார மும்இந்நிலையை அழித்துள்ளது குறித்து அவர் மனம் நொந்தார். பர்தா முறையின் அவசியத்தை வலியுறுத்திய மௌதூதி, மேலைநாட்டு உடைகளைப் பெண்கள் உடுத்துவதைக் கண்டித்தார். முடிவாக, பெண்கள் வீட்டுக்குரியவர்கள் என்பதை இம்மூன்று அணுகல் முறைகளுமே ஏற்றுக்கொண்ட போதிலும் நுணுக்கமாக இவை வேறுபட்டு நிற்பதை வாசகர் கள் புரிந்துகொள்ளக் கூடும். பொருளாதாரத் தேவைகளுக்காக வீட்டிற்குள் முடங்க இயலாமல், வேலைக்குச் செல்ல வேண்டிய வர்களாகவும், வீட்டிலேயே கூட வீட்டுப் பணிகள் தவிர, பீடி சுற்றுதல் முதலான பிற பணிகளைச் செய்ய நேர்ந்த வர்களாகவுமுள்ள நடைமுறைகளும், ஏழை எளிய பெண்களும் எவ்வகையில் அமைய வேண்டும் என் பது சிந்தனைக்குரியது. ருகையா போன்றோர் இவ்வகை யில் சற்று மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்தனர். பெண்கள் ஆண்களிடமிருந்து சாராம்சமாக வேறுபட்ட வர்கள் என்கிற கருத்திலும் இவர்களுக்கிடையே வேறுபாடு இருந்தது. பெண்கள் நிலை குறித்து முஸ்லிம் சமூகத்திற்குள் சமகாலத்தில் நடைபெறும் விவாதங்கள் எல்லோரும் அறிந்ததே.

எனவே அவற்றை இங்கு நான் தவிர்க்கிறேன். முஸ்லிம் சிந்தனையாளர்கள் இவற்றிலிருந்து விலகா மல் முகங்கொடுத்தல் அவசியம். ஆரோக்கியமான விவாதங்களை அனுமதிக்கும் ஒரு நல்ல மரபும் இஸ் லாத்திற்குள் இருந்து வந்ததைச் சுட்டிக் காட்டுவதே என் நோக்கம். மேற்குறிப்பிட்ட மூன்று போக்குகளுக்கும் இன்றும் நடைமுறையில் எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும். எஸ். முஹம்மது பஷீர் அவர்கள் எழுதியுள்ள ‘முஸ்லிம் மனைவியின் கடமைகள் என்னும் திருமணப் பரிசு நூலை நான் பல ஆண்டுகளுக்கு முன் வாசித்தேன். தொடக்கத்திலேயே அவர் ஒரு அட்டவணையிட்டு ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடுகளைப் பட்டியலிடுவது குறிப்பிடத்தக்கது. நேர்மாறான பல கருத்துக்களை முன்வைப்பவர்களும் உண்டுதானே?

(முற்றும்)

மேலப்பாளையம் மற்றும் நெல்பேட்டையில் வாழும் அடித்தள முஸ்லிம்கள்

மூன்று நாட்களாக மேலப்பாளையம் (திருநெல்வேலி), நெல்பேட்டை (மதுரை) பகுதிகளில் வாழும் அடித்தள முஸ்லிம்களுடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. என்னுடன் சுகுமாரனும் ரஜினியும் இருந்தனர். மேலப்பாளையத்தில் எங்களுடன் தோழர்கள் பீட்டர், ரமேஷ், ஆதித் தமிழர் பேரவை சங்கர் மற்றும் வழக்குரைஞர் அப்துல் ஜாபர் சேர்ந்துகொண்டனர். நெல்பேட்டையில் பழனிச்சாமி, வழக்குரைஞர்கள் சையத் அப்துல் காதர், யூசுஃப் ஆகியோர் எங்களுடன் இருந்தனர்.

சச்சார் அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் நிலை இங்குள்ள தலித்களின் நிலையைக் காட்டிலும் பல அம்சங்களில் மோசம் எனக் கூறியுள்ளதைத் தமிழகத்தில் வாழும் நம்மால் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலாது. அதுவும் என்னைப் போன்ற தஞ்சை மாவட்டக் காரர்களுக்கு அது புரிவது கடினம். இங்குள்ள அய்யம்பேட்டை, பாபநாசம், ராஜகிரி, கூத்தாநல்லூர், அத்திக்கடை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் ஓரளவு முஸ்லிம்கள் வசதியாக இருப்பார்கள். முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் முஸ்லிம்கள் நடத்துகிற தரமான பள்ளிகளும் உண்டு.

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார் முதலான மாநிலங்களுக்குச் சென்று பார்க்கும் போதுதான் சச்சார் கூறியதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. கைவினைத் தொழில்கள், ரிக்‌ஷா இழுப்பது, இரும்பு அடிப்பது முதலான கடுமையான பணிகளில் ஈடுபட்டுள்ள வறுமை வயப்பட்ட முஸ்லிம்களை அங்குதான் நிறையக் காண முடிந்தது. அஸ்ஸாமில் வன்முறையாக இடம்பெயர்க்கப்பட்ட மூன்று இலட்சம் முஸ்லிம்களின் அகதி வாழ்வு கண்ணீரை வரவழைத்தது.

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியனவும் இது போல மிகவும் அடித்தள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தான். சுமார் ஒன்றரை இலட்சம் முஸ்லிம்கள் அங்கிருப்பதாகச் சொன்னார்கள். நெருக்கமான வீடுகள், குண்டும் குழியுமான வீதிகள். கல்விக்குப் பெயர்போன பாளையங்கோட்டையின் ஒரு பகுதியான மேலப்பாளையத்தில் முக்கிய கல்வி நிலையங்கள் எதுவும் கிடையாது. நிறைய பீடிக் கம்பெனிகள் உள்ளன. அவற்றின் முதலாளிகள் பெரும்பாலும் மலையாளிகள். பீடி சுற்றுவது மேலப்பாளையத்தார்கள்.

மதுரையின் மையப் பகுதியில் அமைந்துள்ள நெல்பேட்டையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு பகுதி. அங்கும் இதே நிலைதான். பாரம்பரியமான சுங்கம் பள்ளிவாசலிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்த ஒரு மிகக் குறுகலான வீதியில் ஒரு சிறு அறையில்தான் நாங்கள் உட்கார்ந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். சன்னலுக்கு வெளியே ஒரு மாட்டுக் கறிக் கடை. கறிக் கழிவுகள் ஒரு கூடையில் ஈ மொய்த்த வண்ணம் கிடந்தன. நிணம் பொசுங்கும் நாற்றம் காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. கசாப்புக் கடை, அடுப்புக் கரி விற்பது, ஆட்டோ ஓட்டுவது.. இப்படியான வேலைகள்தான் பலருக்கும்.

இரண்டு பகுதிகளிலுமே கல்வி அறிவு வீதம் மிக மிகக் குறைவு என்பது பார்த்தாலே தெரிந்தது. உண்மை வழக்குககளில் சம்பந்தப்பட்டவர்கள், பொய் வழக்கு போடப்பட்டவர்கள், முதலில் ஒரு உண்மை வழக்கில் சிக்கிப் பின் தொடர்ந்து பல பொய் வழக்குகளில் சிக்கவைக்கப் பட்டவர்கள் எனப் பலரையும் சந்தித்தோம். அவ்வளவு பேரும் எதையும் மறைக்காமல் எங்களிடம் உண்மைகளையே சொன்னார்கள். ஓரளவு எங்களால் ஊகிக்க முடியும். யார் உண்மைகளைச் சொல்கின்றனர், யார் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்கள், யார் மிகைப்படுத்திச் சொல்கிறார்கள் என்பது.. எங்களிடம் பேசிய அத்தனை பேருக்கும் தங்கள் வழக்கு விவரங்கள், அல்லது தம் மீதான போலீஸ் கொடுமைகள் எதையும் சரியாகச் சொல்லக் கூடத் தேரியவில்லை. அத்தனை அப்பாவிகள் என நான் சொல்வது இதை வாசிக்கும் பலருக்கும் புரியும் என எனக்குத் தோன்றவில்லை.

‘மேலப்பாளையம் முஸ்லிம்கள்’ என்றொரு சிறு நூலை பேராசிரியை சாந்தி எழுதியுள்ளார். சாந்தி, நண்பர் லெனா குமாரின் மனைவி. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கலாம். சாந்தி என்னை முன்னுரை எழுதக் கேட்டுக்கொண்டார். அற்புதமான ஒரு இன வரைவியல் நூலது. யாரோ ஒரு ஆய்வாளரின் உதவியாளராக அடிக்கடி மேலப்பாளையம் சென்று வந்தவருக்கு அம்மக்களோடு நெருக்கமான உறவு ஏற்பட்டுவிட்டது. மே.பா முஸ்லிம்களின் இனவரைவியற் கூறுகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார். ஆனால் அது, அவர்களின் உணவு, உடை, நம்பிக்கைகள், பிறப்பு, இறப்புச் சடங்குகள் என்கிற அளவில் தொகுப்பதோடு நின்றுவிடவில்லை, அவர்களைக் காவல்துறை எவ்வாறு சுரண்டுகிறது, கொடுமைப்படுத்துகிறது என்பதை நேரில் கண்டு மனம் கலங்குகிறார். அவற்றையும் பதிவு செய்கிறார். மொத்தத்தில் அரசியல் பிரக்ஞையுடன் கூடிய ஒரு அற்புதமான இன வரைவியல் நூலாக அது உருப்பெற்றது.

சித்தரஞ்சன் என்றொரு காவல்துறை அதிகாரி பற்றி சாந்தி அந்நூலில் குறிப்பிடுவார். அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வார். உன் மகனை தீவீரவாதக் கேசில் சிக்க வைப்பேன் எனச் சொல்லி அப்பாவி முஸ்லிம்களிடம் காசு பறிப்பதில் சமர்த்தர் அவர். அப்போது சாந்தி ஒரு ஆய்வு உதவியாளர் மட்டுமே. ஒரு பெண்ணாகவும், எந்தப் பெரிய அரசியல் பின்புலமும் இல்லாமல் இப்படிப் போலிஸ் அதிகாரியின் பெயரை எல்லாம் குறிப்பிட்டு எழுதுகிறாரே, ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது, பேசாமல் பெயரை நீக்கிவிடச் சொல்லலாமா என ஒரு கணம் நினைத்தேன். பிறகு, சரி, ஒரு பெண், தன் கண்முன் நிகழும் சமூக அநீதியைப் பொறுக்க இயலாமல் எழுதுகிறார், அதை ஏன் நாம் முடக்க வேண்டும், அவரது அந்த அழகான துணிச்சலை நாம் ஏன் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நினைத்து, ஒன்றும் பேசாமல் முன்னுரையை எழுதிக் கொடுத்தேன்.

மேலப்பாளையம் போகுமுன் சாந்தியின் நூலை ஒருமுறை படித்துவிடலாம் எனத் தேடினேன். யாரிடம் கொடுத்தேனோ கிடைக்கவில்லை. திருநெல்வேலியில் இறங்கியவுடன் லெனா குமாரிடம் தொடர்பு கொண்டு பெற முயற்சித்தேன். அவர் ஏதோ புதுச்சேரி போய்விட்டாராம். சித்தரஞ்சன் பெயர் நினைவில் இருந்தது. எப்படி இருக்கிறார் அந்த அதிகாரி எனக் கேட்டேன். அவர் ரிடையர் ஆகி கடும் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார் என்றார் ஜப்பார்.

முஸ்லிம் அமைப்புகள் ஏதும் அந்நூலை அநுமதி பெற்று மறு வெளியீடு செய்யலாம்.

நெல்பேட்டைக்குள் நாங்கள் நுழைந்தபோது, அடடே ரஜினி அக்கா என இரண்டு மூன்று பேர் வந்து ரஜினியைச் சூழ்ந்து கொண்டனர். இப்போது நல்ல பல இளம் முஸ்லிம் வழக்குரைஞர்கள், முஸ்லிம்கள் மீது போடப்படும் வழக்குகளை எடுத்து நடத்துகின்றனர். ஒரு பதினைந்தாண்டுகளுக்கு முன் இதுபோன்ற பல வழக்குகளை ரஜினிதான் நடத்தியுள்ளார். தடா சீனி, இப்போது பரிசறிவித்துத் தேடப்படும் போலீஸ் பக்ருதீன் உட்படப் பலரது வழக்குகளை நடத்தியவர் ரஜினி. ஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொன்னார். அசோக் சிங்கால் உட்படப் பல இந்துத்துவப் பேச்சாளர்கள் பேசும் கூட்டம் ஒன்று மதுரையில் நடந்துள்ளது. மிக மோசமாகவும் ஆபாசமாகவும் முஸ்லிம்களைப் பேச்சாளர்கள் ஏசியுள்ளனர். கோபமடைந்த சிலர் ஓடி வந்து ரஜினியிடம் கூறியுள்ளனர். ரஜினி உடனே கூட்டம் நடக்கும் இடத்திற்கு விரைந்து ஒலிபெருக்கி ஒன்றின் அருகில் நின்றுகொண்டு ஒரு டேப் ரிக்கார்டரில் ஏச்சுக்களைப் பதிவு செய்துள்ளார். அப்போது மழை தூறி இருக்கிறது. சுடிதார் துப்பட்டாவை எடுத்துத் தலைமீது போட்டுக் கொண்டு ஒலிப்பதிவு வேலை நடந்திருக்கிறது. அவ்வளவுதான், முஸ்லிம் பெண் தீவிரவாதி கூட்டத்தில் தாக்குதல் நடத்த வந்துள்ளதாகச் செய்தி பரவி கூட்டம் அப்படியே ரஜினியை ஆத்திரத்துடன் சுற்றிக் கொண்டுவிட்டது. நல்ல வேளை அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன் ரஜினிக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி காவலர்களுடன் ஓடி வந்து ரஜினியைப் போலீஸ் வேனில் ஏற்றிக் காப்பாற்றியுள்ளார். பிறகு அந்த அதிகாரியே மேடை ஏறி மைக்கைப் பிடித்து அது தீவிரவாதி இல்லை எனப் பலமுறை சொன்னபின்புதான் ஆவேசம் அடங்கி இருக்கிறது.

சென்ற ஆண்டு திருப்பரங்குன்றத்தில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட பின்பு தாங்கள் எவ்வாறெல்லாம் காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டோம் என்பதைக் கசாப்புக் கடையில் வேலை செய்யும் ஷேக் அலாவுதீன், மினி ஆட்டோ டிரைவர் முகம்மது யாசின், அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவரிடம் உதவியாளராக இருந்த ஜாபர் சுல்தான் முதலானோர் விவரித்தபோது கண்கள் மட்டுமல்ல எங்கள் மனமும் கசிந்தது.

யாரையாவது ஒருவரை இழுத்துச் சென்று அடித்து உதைப்பது. அவரது புகைப்படம், கைரேகை இதர அங்க அடையாளங்களைப் பதிவு செய்வது. அவரது செல்போனைப் பிடுங்கி அதிலுள்ள தொடர்பு எண்கள் எல்லாவற்றையும் கணினியில் ஏற்றிக் கொள்வது, பின் அந்த ஒவ்வொரு எண்ணுக்கும் உரியவரை வரவழைத்து அவர்களியும் இதேபோல நடத்துவது என்பதாகக் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட அப்பகுதி ஆண்கள் எல்லோரது ‘ப்ரொஃபைல்களும்’ எடுக்கப்பட்டுவிட்டன என்றார் அப்துல் காதர். சுமார் எவ்வளவு பேர்கள் இருக்கும் என்றேன். 600 பேர்கள் வரை இருக்கலாம் என்றார். எண்ணிக்கை துல்லியமாக இல்லாததால் எங்கள் அறிக்கையில் “நூற்றுக்கணக்கானோர் இப்படிப் ப்ரொஃபைல் செய்யப்பட்டுள்ளனர்” எனப் பதிவு செய்தோம். முஸ்லிம்கள் மத்தியில் இப்படியான racial profiling செய்ய்யப்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்?

தனியாக வாழும் பெண்களையும் ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் இன்ஸ்பெக்டர் மாடசாமியின் கீழிருந்த சிறப்புக் காவற் படை விட்டு வைக்கவில்லை.மறைந்த பிர்தவ்சின் மனைவி ஆமினா பேகம், முகம்மது ஹனீபாவின் மகள் சகர் பானு ஆகியோர் தாங்கள் விசாரிக்கப்பட்டதை வேதனையோடு பகிர்ந்து கொண்டனர். சகர் பானுவையாவது தேடப்படும் பிலால் மாலிக்கைத் தெரியும் என்பதற்காக விசாரித்தனர் என ஆறுதல் கொள்ளலாம். ஆமீனா பேகத்தின் கதை பரிதாபமானது. நாங்கள் பார்த்தவர்களுள் ஆமீனா ஒருவர்தான், தன்க்கு நேந்ததைச் சீராகச் சொல்லக் கூடியவராக இருந்தார்.

கணவனை இழந்த ஆமீனா தன் மூன்று சிறு பிள்ளைகளை அடுப்புக் கரி வியாபாரம் செய்து காப்பாற்றி வருகிறார். ஆண் துணை இன்றித் தனியாக வாழ்கிறார் எனத் தெரிந்தவுடன் காவல்துறையினர் இவரை அணுகி அவர்களுக்குத் தகவலாளியாக (informer) இருக்கக் கட்டாயப் பாடுத்தியுள்ளனர் முதலில் மாரியப்பன் என்றொரு அதிகாரி வந்துள்ளார். ஆமினா உறுதியாக மறுத்துள்ளார். அப்புறம் மீண்டும் உன்னை விசாரிக்க வீட்டுக்கு வரப்போகிறோம் எனக் கூறியுள்ளனர். நீங்கள் வீட்டிற்கு வர வேண்டாம், நானே வருகிறேன் என ஆமினா கூறி எஸ்.பி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கே மயில்வாகனன், மாடசாமி குழுவினர் சுமார் 40 காவலர்கள் சூழ அவரை விசாரித்துள்ளனர், பெண்களை விசாரிக்கும்போது பெண் காவலர்கள் இருக்க வேண்டும் என்கிற விதியும் மீறப்பட்டுள்ளது. பணம் தருகிறோம் உளவு சொல்ல வேண்டும் என ஆமினாவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆமினா குரலை உயர்த்திச் சத்தம் போட்டுள்ளார். நாந்தான் முடியாதுன்னு சொல்றனே, அப்புறம் ஏன் இப்படித் தொந்தரவு செய்றீங்க எனக் கத்தியுள்ளார். சரிம்மா, சரிம்மா சத்தம் போடாதே, வா, முதல்ல கான்டீன்ல போயி சாப்பிடு எனச் சொல்ல ஆமினா மறுத்துள்ளார். சரி ஆட்டோவில போ எனச் சொல்லி ஒரு நூறு ரூபாய் நோட்டையும் எடுத்து நீட்டியுள்ளனர்.

பிறகு தேசிய அளவில் செயல்படும் மனித உரிமை அமைப்பான என்.சி.எச்.ஆர்.ஓ தலையிட்டு தொல்லை செய்த அதிகாரிகள் மீது private complaint கொடுத்த பின்பு இப்போது பிரச்சினை சற்று ஓய்ந்துள்ளது, நெல்பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட வழக்குரைஞர்களான முகமது யூசுப், அப்துல் காதர் சகோதரர்கள் என்.சி.எச்.ஆர்.ஓவில் துடிப்பாகச் செயல்படக் கூடியவர்கள். நானும் சுகுமாரனும் அஸ்ஸாம் சென்றிருந்தபோது தமிழ்நாடு என்றவுடன் பாதிக்கப்பட்ட பலரும் யூசுப்பைத் தெரியுமா எனக் கேட்டனர். அஸ்ஸாம் வன்முறைகள் நடைபெற்றபோது ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சென்று தங்கி பாதிக்கப்பட்ட பலரையும் சந்தித்து விசாரித்து வாக்குமூலங்களைப் பெற்று வழக்கு நடத்த உதவி செய்தவர் அவர்.

பேசிக் கொண்டு வெளியே வந்தபோது சுங்கம் பள்ளிவாசலைச் சுற்றி நான்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்றோம். தொழுகைத் தலத்தில் கண்காணிப்புக் காமிராக்களா? திகைத்தோம். நான் அதைப் படம் எடுக்க முயற்சித்தபோது வேண்டாம் சார் எனத் தடுத்தனர். நான் படம் எடுப்பது தடைப் பட்டாலும், நான் படம் எடுக்க முயற்சித்ததை அந்தக் காமரா படம் எடுத்துக் கொண்டது.

முதலில் பள்ளிவாசலுக்கு உள்ளும் வெளியிலும் 18 கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தப்பட்டனவாம். யூசுப் சகோதரர்களைப் போன்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபோது பள்ளிவாசலுக்குள் பொருத்தப்பட்டிருந்த 14 காமராக்களை எடுத்துவிட்டார்களாம். காமராக்களைப் பொருத்தியது பள்ளிவாசல் நிர்வாகந்தான் என்ற போதிலும், காவல்துறையின் நிர்ப்பந்தம் காரணமாகவே அவை பொருத்தப்பட்டுள்ளன எனப் பலரும் கூறினர். 18 காமராக்களுக்கும் சுமார் 2.5 லட்சம் செலவாகுமாம். பள்ளிவாசல் வரவு செலவுக் கணக்கில் இந்தச் செலவு பதியப்படவில்லை என்பதால் காவல்துறை வாங்கித் தந்துதான் இவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார் ஒருவர்.

எப்படியான போதிலும் இது ஒரு மிக மோசமான முன் உதாரணம். சுங்கம் பள்ளியைக் காட்டி இனி எல்லாப் பள்ளிகளிலும் இப்படிக் கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தபடலாம். இப்படித் தொழ வருபவர்களைக் கண்காணிப்பதைக் காட்டிலும் கொடுமை ஏதுமில்லை. முஸ்லிம் அமைப்புகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன. இதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரணைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை ஒட்டி மேலப்பாளையம் போன்ற பகுதிகளை ஏதோ பாயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது. ஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது. நம்மையும் சேர்த்துத்தான்.

மேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.