“கர்நாடக வன்முறைகள் : அடையாள அரசியலின் கோர விளைவு”

அடையாள அரசின் மிக ஆபத்தான அம்சம் என்னவெனில் ஒரு அடையாளம் எந்தப் பிரச்சினையை எடுத்துக் களத்தில் இறங்குகிறதோ அந்தப் பிரச்சினைக்கு எதிராக கருத்துச் சொன்னாலே அது அந்த அடையாளத்துக்கே எதிரான கருத்தாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதுதான்.

இன்றைக்கு கர்நாடகத்தில் யாரும் காவேரிப் பிரச்சினையை விவாதிக்கவே கூடாது. விவாதித்தாலே நீங்கள் கன்னட இன விரோதியாக ஆக்கப்படுவீர்கள். நீதிமன்றத் தீர்ப்பு குறித்து நாம் மறு முறையீடு செய்யல்;ஆம், அல்லது இந்த அளவு கொடுக்க இயலாவிட்டாலும் கொஞ்சமாவது தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுக்கலாம் அல்லது, வன்முறையை முதலில் கைவிடுவோம், அநியாயமாக இங்குள்ள தமிழர்களை தாக்ககக் கூடாது…” என்பதுபோல யாரேனும் சொன்னால் கூட அவர்கள் கன்னட இன எதிரிதான். இதற்கு எல்லா அரசியல் கட்சிகளும் அஞ்சுகின்றன. அரசு அஞ்சுகிறது. ஏன் காவல்துறையும் கூட அஞ்சுகிறது.

இப்படி இன வெறியர்களிடம் அரசியல் கைமாறுவது என்பதுதான் நாட்டை எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய கேடு.

இன அரசியல் மிகக் கேடான ஒன்று மட்டுமல்ல, மிக எளிதான ஒன்றும் கூட.

இதை எப்படிக் கடக்கப் போகிறோம்?

143 thoughts on ““கர்நாடக வன்முறைகள் : அடையாள அரசியலின் கோர விளைவு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *